Ticker

6/recent/ticker-posts

கிழக்கு துர்கிஸ்தான் சீனாவின் “ஷின்கியான்” ஆனதெப்படி? - 3


1911
ம் ஆண்டு  ஆட்சிக்கு வந்தஸின்யாத் சின்சீனாவை குடியரசாக மாற்றினார். இவரின் ஆட்சியின்போது  மிகக் கடுமையான  போராட்டத்தை  கிழக்கு துர்கிஸ்தானியர்கள்  நடத்தினர்.

1933ம் ஆண்டு   ஜப்பான் சீனாவுடன் மோதியபோது,  ஜப்பான் வெற்றி பெற்றமையால், ஜப்பானுடன் ஓர் இணக்கப் பாட்டுக்கு வந்த கிழக்கு  துர்கிஸ்தான்  மீண்டும்  சுதந்திரம்   பெற்றதுடன்,  தனது  நாட்டின் பெயரைகிழக்கு துர்கிஸ்தான்  இஸ்லாமிய  குடியரசு  எனப் பிரகடனப்படுத்தி , காஷ்காரைத்  தலைநகராகவும் மாற்றிக் கொண்டது.

கிழக்கு  துர்கிஸ்தான்  இஸ்லாமிய  குடியரசு  1949ம் ஆண்டுவரை ஒன்றரை தசாப்தங்கள் தொடர்ந்தது.

1949ம் ஆண்டு  சீனா  கம்யூனிஸக்  கொள்கைக்கு மாறவே,  ரஷ்யாவுடன் இணைந்து  மீண்டும்  கிழக்கு துர்கிஸ்தானை ஆக்கிரமிக்க முயற்சித்தது.

அம்முயற்சி  1956ம் ஆண்டு சாத்தியமாகவே, மீண்டும்  கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசு சீனாவின் ஷின்கியாங்   மாகாணமாக மாறியது.

தொடர்ந்தும்  சீனா  தனது  குடிமக்களை  கிழக்கு துர்கிஸ்தானில் குடியேற்றிக் கொண்டே  இருந்தது.  வழமைபோல் தனது  படையினரை  அவர்களது  குடும்பத்தினருடன்  குடியேற்றி  அவர்களுக்கான  சகல வசதிகளை யும்  ஏற்படுத்திக் கொடுத்தது.

அதனால் 1949ம் ஆண்டுக்கு  முன்னர்  ஷின்கியாங் கில் ஆறு 

இலட்சத்துக்கும்  குறைவாகவிருந்த  சீனர்கள், 200 மில்லியனுக்கும் மேல் அதிகமானதால், மிக வேகமாகவே  சீனர்கள் பெரும்பான்மையினராக  மாற்றப் பட்டனர்.

முஸ்லிம்களின் எண்ணிக்கை  16 மில்லியன்களாகக் குறைந்தமையானது,  கிழக்கு துர்கிஸ்தான் மக்கள் தமது  சுதந்திரத்திற்காக மில்லியன் கணக்கான உயிர்களை அர்ப்பணித்துள்ளமையை உணர்த்துகின்றது.

எனினும்,   இதுபற்றி   உலகில்  எந்தவொரு  ஊடகமும்  பெரியளவில் பேச வில்லை.  அங்கு  வாழ்ந்து  கொண்டிருக்கும்  முஸ்லிம்களில் அநேகர் சிறைக்கைதிகளாகவும்   அரசியல் கைதிகளாகவும்  உள்ளனர்.

அவர் கள்  எவ்விதக் கூலிகளும் வழங்கப்படாமல், மிகக் கடுமையாக வேலைகள்  செய்யுமாறு  நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அத்தோடு, “ஷின்கியாங் கில் மத வழிபாடுகளை மேற்கொள்வது  தடை செய்யப்பட்டுள்ளது.  வீடுகளில் மறைவாக வழி பாடுகளில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிப்பதற்காக  ஒற் றர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு,  ஆங்காங்கே CCTV கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தடைசெய்யப்பட்ட மத வழிபாடு களில்  ஈடுபட்டார்கள்  என்ற  குற்றச் சாட்டில்  மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சீனாவின்  இம்மனித  உரிமை  மீறல்களை, உய்கூர் முஸ்லிம்களின் அவலங்களை  .நா. சபையில் சில முஸ்லிம்  நாடுகள் பேசிய போதிலும் அவற்றிற்கு  எவ்விதப்  பலனும்  கிட்டியதாக இல்லை.

சீன  அதிபர்  ஷி ஜிங்பிங்  ஆட்சி  மாஓ வழிமுறையில்  உய்கூர்  முஸ்லிம் கள்  மீது  கட்டுக்கடங்காத  அடக்குமுறையை எவ்வாறு புரிகின்றது என்பது சம்பந்தமாக  ஊடகங்களுக்கு  கசிந்துள்ள  சீன அரச ஆவணங்கள்  மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

கசிந்துள்ள 403 பக்கங்களைக் கொண்ட சீன கொம்யூனிஸ அரசின் ஆவணங்கள்,  சீனாவின்  ஷின்கியாங்    மாகாணத்தில்  மில்லியன் கணக்கான உய்கூர்  முஸ்லிம்கள் சிறை மற்றும் முகாம்களில் வதைக்கப்படுவதை  உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.

இவை  உய்கூர் முஸ்லிம்கள்  மீது  உச்சகட்ட மேற்பார்வை  செலுத்துதல் மற்றும் சீனாவின் ஏனைய பகுதிகள்  இஸ்லாத்தை தடுப்பதற்கான உத்தரவிடல்களையும்  திட்டமிடல்களையும்  அம்பலப்படுத்தியுள்ளன.

மேலும்ஷின்கியாங் கில் நிகழ்த்தப்படும்  இனச்சுத்திகரிப்பு  மற்றும் படுகொலைகளை  சர்வதேசமே  எதிர்த்தும் விமர்சித்தும் வரும்  நிலையில், சர்வதேசத்தை உதாசீனப்படுத்தி,  இனச்சுத்திகரிப்பை  ஊக்குவிக்குமுகமாக, “எதிர்க்கும் படைகளின் சிணுங்கலுக்கோ  ஷின்கியாங்  மீது அவர்கள் தப்பெண்ணம்  கொள்வதற்கோ அஞ்சாதீர்கள்என  சீன அதிபர் பேசுவதையும்  இந்த  ஆவணங்கள்  வெளிப்படுத்தியுள்ளன.

உய்கூர் முஸ்லிம்கள்  நினைத்த மாத்திரத்தில் தொழுகை நடத்தி விட முடியாது. தலையில் தொப்பி அணிந்து கொள்ளக் கூடாது. குர்ஆன் ஓதக்கூடாது.  ரமழான் காலத்தில் நோன்பு  நோற்கக் கூடாது. பெண்கள் பர்தா அணியக் கூடாது, இஸ்லாம் மத சம்பந்தப்பட்ட துண்டு துண்டுப் பிரசுரங்கள்  அச்சிட்டு வினியோகிக்கக் கூடாது. இப்படிப் பலவற்றை சீன அரசு  உய்கூர் முஸ்லிம் மக்களுக்குக் கட்டுப்பாடாக விதித்து மீறுவோர் தண்டனைக்குள்ளாக்கப்படுவ ர். சந்தேகம் ஏற்பட்டால் கேள்விகள் கேட்காமலே பிடித்து முகாம்களில் அடைத்து விடப்படுவார்கள்.
(தொடரும்
)

Post a Comment

0 Comments