விண்ணில் நடக்கும் ஒரு அதிசயம்..! இனி வானில் தெரியப்போகும் 2 நிலா

விண்ணில் நடக்கும் ஒரு அதிசயம்..! இனி வானில் தெரியப்போகும் 2 நிலா


பூமிக்கு 2 மாதங்களுக்கு மட்டும் ஒரு தற்காலிக நிலா கிடைக்கப்போகிறது என்று நாசா அறிவித்துள்ளது மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பூமியை சுற்றி வரும் ஒரு இயற்கை சாட்டிலைட் தான் நிலா. தற்போது அதேபோல ஒரு விண்கல், பூமியை சிறிது காலம் சுற்றிவிட்டு செல்லவிருக்கிறது. இந்த நிகழ்வு நடக்கப்போகிறதென்று, நாசா உதவி பெறும் ‘விண்கல் நிலப்பரப்பு-தாக்கம் கடைசி எச்சரிக்கை அமைப்பு’ (ATLAS) தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் குறித்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாசா கண்டறிந்தது. 33 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல், வரும் 29-ஆம் தேதி (நாளை) முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை பூமியை சுற்றிவர உள்ளது. 55 நாட்கள் சுற்றி வரும் இந்த விண்கல்லுக்கு, ‘2024 பிடி5’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கல் பூமியை முழுவதும் சுற்றாது என்றும், ஒரு வில் வடிவத்தில் மட்டும் பூமியை சுற்றிவிட்டு, பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டும் இதேபோல் ஒரு விண்கல் பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்து, பூமியை சுற்றி வந்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் அந்த விண்கல் ஒரு வருடம், அதாவது 2006 ஜூலை முதல் 2007 ஜூலை வரை பூமியை சுற்றி வந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் இப்போது வரும் விண்கல், ‘2022 NX1’ போன்று பூமியை சுற்றும் என அறிவிக்கப்பட்டது. 2022 NX1 என பெயரிடப்பட்ட ஒரு விண்கல் கடந்த 1981-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டு இதேபோல் பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்து விலகி சென்றது. மீண்டும் இந்த விண்கல் 2051-ஆம் ஆண்டில் பூமியின் பாதைக்கே மீண்டும் வரும் என விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள்.

பூமி அவ்வப்போது வான்வெளியில் வரும் இதுபோன்ற விண்கற்களை ஈர்த்துக்கொள்ளும். அதனுடைய சுற்றுப்பாதை வேகத்தை விடவும், பூமியின் விசையீர்ப்பு அதிகமாக இருந்தால், அந்த விண்கற்கள் பூமியில் வந்து விழும். இல்லையென்றால் தற்போது வரும் விண்கல்லை போல பூமியின் பாதைக்கு வந்து விலகிச்செல்லும்.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post