
வகுப்பறையில் பாடம் கற்றல்
படிப்பு விட்டுத் தொழில்கள் தேடல்
இல் வாழ்வில் இணைந்து நிற்றல்
ஏற்றம் பல கண்டு போற்றல்
எப் படியில் நின்ற போதும்
பெண்ணுக்குப் பெண் பகையோ
பல ஆணிடம் தோன்றுவது போட்டி
பெண்ணிடம் தோன்றுவது பொறாமை.
மண வாழ்வில் இணைந்த போதும்
மாமியாரும் மைத்துனியும்
இணையாக மரு மகளை
இம்சிக்கும் கதைகள் கோடி.
மரு மகளைத் தன் மகளாய்
மதிப் பளிக்கும் மனங்க ளேது?
மகன் மாரைத் தூண்டி விட்டு
மரு மகளை இம்சிப்பர்.
தாய் வீட்டு சீ தனமாய்
தங்கத் தட்டில் படைத்திட்டாலும்
ஏவி விட்டு இன்பம் காணும்
மாமியார்கள் எத்தனையோ.!
தாம் கொடுக்கும் இம்சை யாவும்
தம் மகனின் நிம்மதி துரத்தும்
கேடு தனை யார் நினைப்பார்?
கெடுதல் செய்தே குடி சிதைப்பார்.
நம் முரிமை பறிப்பதற்கே
பின்னின்றே கதை புனைவார்.
முன்னாலே எமை யனுப்பி
பின்னாலே இடித் துரைப்பார்
பெண் ணுரிமை யென்றே நாமும்
பேசுவதும் யாரிடமோ...?
கண் ணயர்ந்தால் கழுத் தறுக்கும்
பெண் ணினத்தை யாது செய்வோம்?


0 Comments