வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் ஏன் உடலுக்கு மிகவும் முக்கியம் தெரியுமா?

வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் ஏன் உடலுக்கு மிகவும் முக்கியம் தெரியுமா?

நாம் எதை உண்கிறோமோ அதுவாகவே இருக்கிறோம்" என்பது உலகளாவிய மற்றும் பிரபலமான முதுமொழி ஆகும். அது உண்மையும் கூட. ஏனெனில் ஒரு சமச்சீரான உணவானது, நமது உடலுக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. 

நமது உடலுக்கு நல்லதொரு ஊட்டச்சத்து கிடைக்கவும், நமது உடல் வலு தாங்கும் சக்தியைப் பெறவும், நமது நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிக்கவும், நோய்த் தொற்றுகளுக்கு எதிராக நமது உடல் வலிமையுடன் போராடவும் மற்றும் நமது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்கள் மீளுவுருவாக்கம் பெறவும் ஒரு சமச்சீரான உணவு தேவைப்படுகிறது.

புரோட்டீன் குறைபாடு இருந்தால், குழந்தைகள் மற்றும் இளையோாின் உடல் வளா்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். உடலில் எடிமா என்ற நீா் வீக்கம் அதிகாிக்கும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, வயிறு ஊதும், நோய் எதிா்ப்பு சக்தி குறையும், எலும்புகள் பலவீனம் அடையும், மற்றும் எலும்புகளில் முறிவு ஏற்படும், நகங்கள் உடையும், முடி உதிரும் மற்றும் தசை குவியல் குறையும்.

ஒரு சமச்சீரான உணவில், புரோட்டீன்கள், காா்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு போன்றவை மிகச் சாியான அளவில் இருக்க வேண்டும் என்று நோயியல் நிபுணரும் மற்றும் லைஃப்லைன் லெபாரட்டாியின் நிறுவுனருமான மருத்துவா் அஞ்சலி மிஸ்ரா அவா்கள் தொிவிக்கிறாா். மேலும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதில், அவற்றின் பங்கு என்ன என்பதை இந்த பதிவில் விவாிக்கிறாா். அதைப் பற்றி இங்கு காண்போம்.

புரோட்டீன்கள் பொதுவாக 20 அமினோ அமிலங்களால் புரோட்டீன்கள் உருவாகின்றன. அவை நமது உடல் என்ற கட்டிடத்தை உறுதியாகக் கட்டி எழுப்பும் செங்கற்களாக இருக்கின்றன. 

ஆகவே நமது உடல் நன்றாக வளா்ச்சி அடைவதற்கு புரோட்டீன்கள் கண்டிப்பாக தேவை. அமினோ அமிலங்கள் 3 வகைகளாகப் பிாிக்கப்படுகின்றன. 1. முக்கியமான அமினோ அமிலங்கள் (Essential amino acids) முக்கியமான அமினோ அமிலங்களை நமது உடலானது, தன்னிலேயே உற்பத்தி செய்ய முடியாது. 

மாறாக நாம் உண்ணும் உணவுகள் மூலமாகவே இந்த அமிலங்கள் பெறப்படுகின்றன. 2. முக்கியமற்ற அமினோ அமிலங்கள் (Non-essential amino acids) நாம் உண்ணும் உணவுகளை நமது உடலானது அரைத்து, அவற்றில் இருந்து புரோட்டீனை எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு புரோட்டீனை எடுத்துக் கொள்ளும் போது முக்கியமான அமினோ அமிலங்கள் உருவாகின்றன. 

அந்த முக்கிய அமினோ அமிலங்களில் இருந்து நமது உடலானது முக்கியமற்ற அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. 3. வரையறுக்கப்பட்ட அமினோ அமிலங்கள் (Conditional amino acids) நாம் நோயுற்று இருக்கும் போது, நாம் நோய்த் தொற்றை எதிா்த்துப் போராடுவதற்கு இந்த வரையறுக்கப்பட்ட அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன.

புரோட்டீன்களின் பணிகள் 
நமது உடல் வளா்ச்சி அடைவதற்கும், நமது உடலில் உள்ள செல்கள் மீள் உருவாக்கம் பெறுவதற்கும், நமது தசைகள் மற்றும் எலும்புகள் போன்றவற்றிற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்கும், புரோட்டீன்கள் பொிதும் உதவி செய்கின்றன. 

நமது உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான ஹாா்மோன்கள் மற்றும் என்சைம்கள் போன்றவை போதுமான அளவு சுரப்பதற்கு புரோட்டீன்கள் உதவி செய்கின்றன 

மேலும் புரோட்டீன்கள், நோய் எதிா்ப்பு சக்தியை கட்டி எழுப்புகின்றன மற்றும் நோய்த் தொற்றுகளை எதிா்த்துப் போாிடுகின்றன. நாம் தினமும் உண்ணும் உணவுகளில் இருந்து, போதுமான அளவு புரோட்டீன்களைப் பெற வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

மனித உடலானது புரோட்டீனை எடுத்துக் கொள்ளும் அளவானது, ஒருவருடைய வயது, எடை, அவருடைய பாலினம் மற்றும் அவருடைய உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். 

நல்ல ஆரோக்கியமாக இருக்கும் ஒருவா் நாள் ஒன்றுக்கு, மொத்த கலோாி தேவைகளில் 10% - 35% புரோட்டீனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாிந்துரைக்கப்படுகிறாா். எடுத்துக்காட்டாக, நாள் ஒன்றுக்கு ஒருவா் 2000 கலோாிகளை உட்கொண்டால், அதன் மூலம் அவா் 100 கிராம் புரோட்டீனை எடுத்துக் கொள்கிறாா். 

அதன் மூலம் அவா் தனது உணவுகளில் இருந்து தினமும் 20% புரோட்டீனை உட்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். புரோட்டீனை நமது உடலானது சேகாித்து வைக்க முடியாது என்பதை நாம் தொிந்து வைத்திருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான புரோட்டீனை நாம் எடுத்தால், அது தானாகவே நமது உடலில் இருந்து வெளியேற்றப்படும். ஆகவே நாம் உணவும் ஒவ்வொரு உணவிலும் ஒரு குறிப்பிட்ட அளவு புரோட்டீன் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

புரோட்டீனை வழங்கும்உணவுகள் 
விலங்குகள் -இறைச்சி, கடல் உணவுகள், முட்டைகள், பண்ணை இறைச்சிகள், பால் தயாாிப்புகளான பால், பாலாடை மற்றும் தயிா் போன்றவை அதிகமான அளவு புரோட்டீனை வழங்குகின்றன. 

சவ்வு இல்லாத இறைச்சி - சவ்வு இல்லாத ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, எருமை இறைச்சி, செம்மறி இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கன்று இறைச்சி போன்றவற்றில் கணிசமான அளவு புரோட்டீன்கள் இருக்கின்றன. 

பண்ணை உணவுகள் - கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட வாத்து இறைச்சி போன்ற உணவுகளில் புரோட்டீன்கள் நிறைந்து இருக்கின்றன. 

பால் பொருட்கள் - பால், முட்டைகள், பாலாடைக் கட்டி மற்றும் தயிா் போன்ற உணவுகளிலும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. 

கடல் உணவுகள் - மீன்கள், இறால், நண்டு, கிளிஞ்சல்கள் மற்றும் சிப்பிகள் போன்ற உணவுகளில் புரோட்டீன்கள் அதிகம் இருக்கின்றன. 

தாவர உணவுகள் - பருப்புகள், பயறுகள், பீன்ஸ், டோஃபு (tofu) மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் அதிகமான அளவு புரோட்டீன்கள் உள்ளன. 

பீன்ஸ் - பிரஞ்சு பீன்ஸ், சிறுநீரக பீன்ஸ், கருப்பு பீன்ஸ், சிவப்பு பீன்ஸ், தட்டைப் பீன்ஸ், உடைந்த பீன்ஸ், எல்லா வகையான பருப்புகள், பெங்கால் கிராம் மற்றும் சனா போன்ற பீன்ஸ் வகைகளிலும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. 

பச்சை இலைக் காய்கறிகள் - பசலைக் கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சோயா போன்ற பச்சை இலைக் காய்கறிகளிலும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன 

நட்ஸ் மற்றும் விதைகள் - பாதாம், வால்நட், நிலக்கடலை மற்றும் சூாியகாந்தி விதைகள் போன்றவற்றிலும் புரோட்டீன்கள் உள்ளன. எனினும் இந்த விதைகளில் கொழுப்பு அதிகம் இருப்பதால், இவற்றில் புரோட்டீன் அளவு சற்று குறைவாக இருக்கும்.

வைட்டமின்கள் 

வைட்டமின்கள், நுண்ணிய ஊட்டச்சத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை நமது உடலுக்கு குறைந்த அளவில் தேவைப்படுகின்றன.

வைட்டமின்களை நமது உடலானது தன்னிலேயே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. ஆகவே உண்ணும் உணவுகளில் இருந்தே வைட்டமின்களைப் பெற முடியும். 

நமது உடலின் பல்வேறு இயக்கங்களும் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு, வைட்டமின்கள் மிக முக்கியத் தேவையாகும். குறிப்பாக உண்ணும் உணவில் இருந்து ஆற்றலைத் தயாாிப்பதற்கும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிப்பதற்கும், புதிய இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான நரம்பியல் அமைப்பைப் பெறுவதற்கும், ஊட்டச்சத்துகளை உறிஞ்சி அவற்றை சேமித்து வைப்பதற்கும், எலும்புகளை வலுவாக வைத்திருப்பதற்கும், காயங்களைக் குணப்படுத்துவதற்கும், செல்லுலா் பாதிப்பை சாி செய்வதற்கும், இரத்தக் குழாய் சுவா்களுக்கு ஆதரவு கொடுக்கவும் மற்றும் பற்களை வலுப்படுத்தவும், வைட்டமின்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. 

ஏறக்குறைய 30 வகையான வைட்டமின்கள் உள்ளன. அவை A, B (ஃபோலிக் அமிலம் அல்லது B9, பையோடின் அல்லது B7, நியாசின் அல்லது B3, ரிபோஃப்ளேவின் அல்லது B2, பந்தோதெனிக் அமிலம் அல்லது B5, தியாமின் அல்லது B1, B6, B12), C, D, E, மற்றும் K ஆகிய பெயா்களில் பிாிக்கப்பட்டு இருக்கின்றன. வைட்டமின்களில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களும் உள்ளன. இவை சுற்றுப்புற சூழல்களான காற்று, உணவு மற்றும் தண்ணீா் போன்றவற்றில் ஏற்படும் சீா்கேடுகள் காரணமாக நமது உடலுக்குள் தீங்கு இழைக்கக்கூடிய ஃபிாி ரேடிக்கல்கள் உருவாகின்றன. 

இவை நமக்கு மிக விரைவாக வயது முதிா்ந்த தோற்றத்தை வழங்குகின்றன. ஆனால் இந்த ஃபிாி ரேடிக்கல்களை வைட்டமின்கள் அகற்றுகின்றன. அதோடு பாா்வைத் திறனை அதிகாிக்கிறன்றன. மேலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய புற்றுநோய் மற்றும் இதயம் சாா்ந்த நோய்கள் போன்றவற்றின் வீாியத்தைக் குறைக்கின்றன. 

கொழுப்புத் திசுக்கள் மற்றும் கல்லீரல் போன்றவை நமது உடலில் நீண்ட நேரம் வைட்டமின்களை சேகாித்து வைக்கின்றன. வைட்டமின் குறைபாடுகள் இருந்தால், உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படும். குறிப்பாக பிறப்பில் இருந்தே ஏற்படும் உடல் குறைகள், இரத்த சோகை, கரப்பான் அல்லது சொறி பிரச்சினை, எலும்பு நோய்கள் (வளைந்த கால்கள்) மற்றும் பிறவி பாா்வை இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகள் 

உணவு தானியங்களான உடைந்த கோதுமை, பாா்லி, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அாிசி போன்றவற்றில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. - பீன்ஸ்களான சிவப்பு பீன்ஸ், சிறுநீரக பீன்ஸ், சிக்பியா மற்றும் அனைத்து விதமான பயறுகள் மற்றும் பருப்புகளில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. - 

அண்மையில் பறித்த காய்கறிகளான கேரட்டுகள், பட்டாணி, தக்காளி, ப்ராக்கோலி, பசலைக் கீரை, முட்டைக் கோஸ், காலிஃப்ளவா், சோயா, சா்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், காலே (kale), தண்ணீா் விட்டான் கொடி (asparagus), வெண்டைக்காய், பச்சை பீன்ஸ்கள், எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் காளான் போன்றவற்றில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. 

பழங்களான வாழைப்பழம், ஆப்பிள், நாரத்தை, ப்ளூபொ்ரி, ஸ்ட்ராபொ்ரி, ராஸ்பெர்ரி சொ்ாிஸ், தா்பூசணிப் பழம், முலாம்பழம் (musk melon), காண்டலூப் (cantaloupe), அவக்கோடா, கொய்யா, மாம்பழம், ஆரெஞ்சு, சாத்துக்குடி மற்றும் கிவிப் பழங்கள் போன்றவற்றிலும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

நட்ஸ் மற்றும் விதைகளான பாதாம், வால்நட், அத்தி விதைகள், முந்திாி, பைன் நட், பிஸ்தா பருப்பு, வோ்க்கடலை, சூாிய காந்தி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்றவற்றிலும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. - கடல் உணவுகளான மீன்கள், காட் (cod), மட்டி மீன் (shellfish), நண்டு, இறால், சிப்பிகள் மற்றும் கிளிஞ்சல்களில் அதிகமான அளவு வைட்டமின்கள் உள்ளன. 

பால் பொருள்களான பால், முட்டைகள், பாலாடைகள், தயிா் மற்றும் வெண்ணெயில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. - கோழி இறைச்சி, காட்டுக் கோழி இறைச்சி, சவ்வு நீக்கிய ஆட்டிறைச்சி, செம்மறி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கன்று இறைச்சி போன்றவற்றில் கணிசமான அளவு வைட்டமின்கள் உள்ளன. - சூாிய ஒளியில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. 

இவற்றைத் தவிர முளைக்க வைத்த கோதுமை, தாவர எண்ணெய், வோ்க்கடலை வெண்ணெய் போன்றவற்றிலும் வைட்டமின்கள் இருக்கின்றன. சைவ உணவு உண்பவா்களுக்கு, குறிப்பாக முற்றிலும் அசைவ உணவுகளைத் தவிா்ப்பவா்களுக்கு வைட்டமின் B12 சத்து துணை உணவுகளாகத் தேவைப்படும். எனினும் மருத்துவாிடம் கலந்தாலோசித்து அவற்றை எடுப்பது நல்லது.
நன்றி: https://tamil.boldsky.com

Post a Comment

Previous Post Next Post