ஆடம்பரத்தின் உச்சம்

ஆடம்பரத்தின் உச்சம்


உலகின் உள்ள நாடுகளினல் மிகவும் விலைவாசி உயர்வான நாடு துபாய் இங்கு வாழ்வதற்கு அதிகளவிலான பணம் தேவைப்படும்.

இந்த நிலையில ஒருவர் தனது ஒருவேளை இரவு உணவுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார்.

துபாயின் மர்யா தீவில் மிகவும் பிரபலமான துருக்கி உணவகம் ஒன்று உள்ளது. நுஸ்ரட் கெலேரியா எனப் பெயர் கொண்ட இந்த உணவகத்தின் உரிமையாளர் நுஸ்ரட் கோக்சே.

இந்த உணவகம் ஆரம்பத்தில் பிரபலமான ஒன்றாக இல்லாத நிலையில், நுஸ்ரத் அசைவ உணவுகளை தங்கம் இழைத்த இதழ்கள் மூடி பரிமாறத் தொடங்கிய பிறகு பிரபலமாகத் தொடங்கினார்.

பின்னர் தான் அவருடைய உணவகத்திற்கு பெரிய பெரிய விஐபிகள் வரத் தொடங்கியுள்ளன. சார்ட் பே எனப் பெற்ற நுஸ்ரத்தின் உணவகத்தில் சாப்பிடுவதே கௌரவமாக பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நுஸ்ரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உணவக பில் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பில்லை பார்த்த பலரும் தலை சுற்றி போயுள்ளனர். அந்த உணவக பில் தொகை 6,15,065 திராம். இது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 30 லட்சம்.

இதில் மதிப்பு கூட்டு வரி மட்டும் சுமார் ஆறரை லட்சமாம். அந்த பில்லில் தரத்திற்கு எப்போதும் விலை கிடையாது என்ற குறிப்பையும் நுஸ்ரத் இந்த பில்லோடு பதிவு செய்திருக்கிறார்.

இந்த பில்லுக்குரிய வாடிக்கையாளர் ஒருவர் உலகிலேயே மிகவும் விலைஉயர்ந்த ஒயின் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அத்துடன் சில உணவு வகைகளையும் ஆர்டர் செய்துள்ளார். இந்த பில்லை பார்த்த பலரும் இது ஆடம்பரத்தின் உச்சம் என தெரிவித்துள்ளனர்.
  



 


Post a Comment

Previous Post Next Post