உலகின் பணக்கார நாடு சீனா; 120 ட்ரில்லியன் டாலர்கள்- அமெரிக்காவை முந்தியது

உலகின் பணக்கார நாடு சீனா; 120 ட்ரில்லியன் டாலர்கள்- அமெரிக்காவை முந்தியது

விலை அதிகரிப்பினாலும் பணவீக்கத்தையும் தாண்டி நிகர மதிப்பு அதிகரிப்பது நல்லதல்ல. இதனால் பக்கவிளைவுகள் நிறைய ஏற்படும் வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட் விலை உயர்ந்து கொண்டே போனால் வீடு வாங்கும் கனவு பலருக்கு நிறைவேறாது மேலும் நிதி நெருக்கடி அபாயமும் உண்டு. அமெரிக்காவை 2008-ல் உலுக்கிய் நிதி நெருக்கடி சீனாவையும் உலுக்கும் ஆபத்துள்ளது.

உலக பொருளாதாரத்தின் நிகர மதிப்புகள் குறித்து ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உலகின் 60 சதவீத வருமானத்தை வைத்திருக்கும் நாடுகளின் இருப்பு நிலை குறித்து 2000 முதல் 2020ம் ஆண்டு வரையிலான தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலராக இருந்த உலகின் மொத்த பொருளாதார நிகர மதிப்பு 2020ம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்கு சீனாவின் பங்களிப்பாகும்.

2000ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார நிகர மதிப்பு 7 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. இது தற்போது 120 டிரில்லியன் டாலராக எகிறியுள்ளது. இதன்மூலம் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது. அமெரிக்கா சுமார் 90 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் மொத்த செல்வத்தில், 3ல் இரு பங்கினை 10 சதவீத பணக்கார குடும்பங்கள்

பணக்கார நாடுகள் பட்டியலில், ஜெர்மனி 3வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகளவில் 68 சதவீத சொத்துக்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்து இருக்கிறது. அதேபோல், உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களின் மதிப்பு 11 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மெக்கின்சியின் கணக்கின் படி உலகின் மொத்த நிகர மதிப்பில் 68% ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மீதி உள்கட்டமைப்பு, எந்திரம், சாதனங்கள், புத்திசார் சொத்துக்கள் மற்றும் காப்புரிமையில் உள்ளது.

உலக ஒட்டுமொத்த நிகர மதிப்பு உயர்வது நல்லதா?

கடந்த 20 ஆண்டுகளில் நிகர மதிப்பு அதிகரித்திருப்பது நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக் குறைவினால் என்பதை புரிந்து கொள்வது நல்லது. இதுசொத்துக்கள் விலை அதிகரிப்பினால் விளையும் நிகர மதிப்பு உயர்வாகும். விலை அதிகரிப்பினாலும் பணவீக்கத்தையும் தாண்டி நிகர மதிப்பு அதிகரிப்பது நல்லதல்ல. இதனால் பக்கவிளைவுகள் நிறைய ஏற்படும் வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட் விலை உயர்ந்து கொண்டே போனால் வீடு வாங்கும் கனவு பலருக்கு நிறைவேறாது மேலும் நிதி நெருக்கடி அபாயமும் உண்டு. அமெரிக்காவை 2008-ல் உலுக்கிய் நிதி நெருக்கடி சீனாவையும் உலுக்கும் ஆபத்துள்ளது.

ஆக்கப்பூர்வமான முதலீடுகளை மேற்கொண்டு உலக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டுமே தவிர சொத்து விலைகள் நாளை சரிந்து விட்டால் உலக செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு அழிந்துதான் போகும். எனவே உற்பத்தி சார், ஆக்கப்பூர்வ வளர்ச்சியில்லாமல் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதுவும் விலை ஏற்றத்தினால் ஏற்படும் நிகர மதிப்பு உயர்வு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்றி;news18 tanil








Post a Comment

Previous Post Next Post