பரீட்சையில் சித்தியடைந்தால் மட்டும் போதுமா?

பரீட்சையில் சித்தியடைந்தால் மட்டும் போதுமா?

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை மட்டுமே தினமும் வாழ்த்திக்கொண்டிருக்கின்றோம்.சித்தியடைபவர்கள் மட்டும்தான் வாழ்கையில் வெற்றிபெருபவர்களாகநினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்தான் வாழ்கையில் பெரிய சாதனைகளை செய்தவர்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த எண்ணத்தை முற்றிலுமாக நீக்கி விடுங்கள் .ஏனென்றால் சாதனையாளர்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டாள் அனேகம்பேர் படித்தவர்கள் இல்லை .படித்திருந்தாலும் சித்தியடைந்தவர்கள் இல்லை .ஆனால் தொழிலில் முன்னேறியிருப்பார்கள்.அவர்களுக்கு கீழ் நூற்றுக் கணக்கான படித்தவர்கள் கைநீட்டி சம்பளம் பெருபவர்கலாய் வேலைபார்ப்பவர்களாய் இருப்பார்கள்.

பிள்ளைகளிடம் டாக்டர் என்ஜினியர் என்ற ஆசைகளை வளர்க்கவேண்டாம்.அந்தக் கனவுகளோடு பயணிக்கின்ற பிள்ளைகள் ஒரு கட்டத்தில் சறுக்கி விழும்போது அவர்களால் மீண்டு வருவது கடினம் .ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்கையில் சின்னச் சின்னச் சறுக்கல்கள் வருவது தவிர்க்க முயாததொன்று .

பிள்ளைகளுக்கு ஆசைகாட்டி வளர்ப்பது மிகவும் மோசமான பழக்கம் .அது கடைசியில் ஆபத்தில்தான் முடியும் ,அதுதான் இன்றைய நிலை .

தேர்வுகளில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் தற்கொலை.பரீட்சையில் தோல்வியடைந்தால் வெளியில் எப்படி தலைகாட்டுவது?,பாடசாளைக்குச் சென்றாள். நண்பர்கள் கேலி பண்ணுவார்கள் போன்ற விரக்தியில் பல தற்கொலைகள் .  

இந்த தற்கொலைகள் கல்வியால் நடந்த தற்கொலைகள் அல்ல .நமது கல்வி முறையால் நடந்த கொலைகள்தான். .

சிறு வயது முதற்கொண்டு பிள்ளைகளின் ஆசைக்கேற்ற ,திறமைக்கேற்ற முறையில் பெற்றோரும் ஆசிரியர்களும் வழியமைத்துக் கொடுக்க வேண்டும் .

பின்லாந்து,ஜப்பான் போன்ற நாடுகள் இன்று உலகத்தில் மிகச் சிறந்த கல்வி முறைகளை மாணவர்களுக்கு பயிற்ருவிக்கின்றார்கள்.சிறு வயதிலேயே அவர்களுக்கு இருக்கின்ற திறமைக்கேற்ப கல்வி கற்பிக்கப் படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்தவுடன் அவர்களுக்கான வகுப்புக்களில் அவரவர் திறமைக்கு உகந்த பாடங்கள் புகட்டப் படுகின்றன .எந்த ஒரு பிள்ளையும்  பரீட்சையில் தோல்வியை நினைத்து வருந்தக்கூடிய நிலை ஏட்படுவதில்லை.அந்த நாடுகளில் பரீட்சை பெறுபேறுகளை அறிவிப்பதில்லை .பரீட்சை தாள்களில் அவர்களின் திறமையை ஆசிரியர்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு தொழில்  வழங்கப்படுகின்றது. 

உலகிலேயே மிக வெற்றிகரமாக கல்விமுறையை பின்பற்றும் நாடு முதன்மை நாடு பின்லாந்து. அங்கே மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவாகவே அவர்கள் கல்வி முறையில் பின்பற்ற படுகிறது.

ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது...

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது...

ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

மாணவர்களுக்கு  வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...
அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...
‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

இதனால்தான் உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

மகிழ்ச்சியாக இருக்கும்  குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

இப்படி பல விடயங்களில் பின்லாந்து கல்வி முறையில்  முன்னணியில் இருக்கின்றது.

தாமஸ் ஆல்வா எடிசனை படிப்பில் மக்கு  என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு காரணமாயிருந்தவர்..

ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

இப்படியான கல்வி முறைகளை எமது நாட்டிலும் அறிமுகம் செய்தால் எதிர்கால சந்ததியாவது மகிழ்ச்சியுடன் வாழலாமே !
கல்ஹின்னை மாஸ்டர் 

Post a Comment

Previous Post Next Post