இனி இலங்கையில் கஞ்சாவுக்குப் பஞ்சமில்லை

இனி இலங்கையில் கஞ்சாவுக்குப் பஞ்சமில்லை

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு சில பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஞ்சா பயிரிடுவதன் மூலம் நாட்டுக்கு நல்ல வருமானத்தைப் பெற முடியும் என்ற யோசனையை முன் வைத்தது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாரிய நெருக்கடிக்கு கஞ்சா மூலம் தீர்வு கிடைக்கும் என்ற ஒரு முட்டாள்தனமான யோசனையை இப்படிப்பட்ட அறிவில்லாத அரசியல்வாதிகள் முன் வைத்தது வேடிக்கையாயிருக்கின்றது.

இப்படிப்பட்ட முட்டாள்தன யோசனைகள் ,ஏற்கனவே போதை மருந்துகளாலும்,மதுவாலும் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் இலங்கை மக்களை படுகுளிக்குள் அடக்கம் செய்வதற்கு சமன் என்றே கருதவேண்டியுள்ளது.

ஏற்கனவே உருப்படியில்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த முட்டாள்தன யோசனைகளை.இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளதையிட்டு, மிகப்பெரும் ஆபத்தில் இலங்கை சிக்கியுள்ளதை புரிந்துகொள்ள முடிகின்றது.

இனி இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வருமா என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கத் துவங்கிவிட்டார்கள். 

இன்று கஞ்சா பயிரிடுவார்கள் .நாளை ஹிரோயின் .அடுத்தது இருக்கின்ற அத்தனை போதை வஸ்துக்களும் இலங்கையில் கிடைக்கும் என்ற ஒரு விளம்பரம் உலகெங்கும் பரவும்.

பொருளாதாரத்தை மேன்படுத்த பல பலவழிகள் இருக்கின்றன.அவற்றைக்கொண்டு பொருளாதாரத்தை சீர் செய்யாமல் மக்களை போதைக்கு பலிகொடுப்பது ,இன்றைய அரசாங்கத்தின் பலஹீனத்தையே காட்டுகின்றது. 
   
இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

“இந்த மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால் தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன்.

அடுத்த வருடம் கஞ்சா தோட்டம் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான முதலீடுகளை கொண்டு வர நான் எதிர்பார்க்கிறேன்” என கமகே கூறியுள்ளார்.


தாமே இந்த முன்மொழிவை சில காலத்திற்கு முன் மேற்கொண்டதாக என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இனிவரும் காலங்களில் போதை மருந்துகள் இலங்கையில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய சூழ் நிலை வரும்."NO SMOKING"என்ற கட்டுப்பாடுகளை விதித்து அந்தந்த நாடுகளிலேயே உற்பத்தி செய்து சர்வ சாதரணமாக கடைகளில் கிடைக்கும் சிகரட்டைப் போன்று போதை மருந்துகளும் கிடைக்கும்.
கல்ஹின்னை மாஸ்டர் 
 


 


Post a Comment

Previous Post Next Post