இந்தியாவில் மோசமான பஞ்சம் ஏற்படும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்பு

இந்தியாவில் மோசமான பஞ்சம் ஏற்படும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்பு

இந்த வருடம் இந்தியாவில் மோசமான பஞ்சம் ஏற்படும் என்றும் இதற்கு கடுமையான வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக இருக்கும் என்றும் இந்தியா குறித்து பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்பு தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.

 பூமியின் வெப்ப நிலை காரணமாக இந்த வெட்டுக்கிளி தாக்குதல் நடக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களை தாக்கி அழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் நாட்டில் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளது. நாட்டில் கடந்த சமீப ஆண்டுகளில் இதுபோன்ற வெட்டுக்கிளி தாக்குதல் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட இப்போது பாபா வங்கா எச்சரித்து உள்ளதால் அது பேசுபொருள் ஆகியுள்ளது.

ஏனெனில் அவர் 2022க்கு என ஆறு கணிப்புகளை வைத்திருந்தார். அதில் இதுவரை இரண்டு உண்மையாகி உள்ளது. பல ஆசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படும் எனக் கணித்து இருந்தார். அது அப்படியே நடந்தது. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 

 அதேபோல வறட்சி காரணமாகப் பெரிய நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கூறி இருந்தார். அதேபோல போர்த்துகல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் நீரைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கட்டுப்பாட்டை விதித்தன.1950க்கு பிறகு இத்தாலியில் மிக மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இத்தாலியில் வறட்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் ஆண்டுகள் தொடர்பாகவும் அவர் பல முக்கிய கணிப்புகளைச் செய்துள்ளார். அதாவது 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்றும் 2028இல் வீனஸுக்கு விண்வெளி வீரர்கள் பயணம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல 2046இல் உறுப்பு மாற்றுத் தொழில்நுட்பம் காரணமாக மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும் அவர் கணித்தார். அதேபோல 2100இல் முதல்,செயற்கை சூரிய ஒளி காரணமாகப் பூமியில் இரவு என்பதே இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post