
இந்த நாட்டின் முஸ்லிம்களை ஒன்று திரட்டி ஒன்று படுத்தி முஸ்லிம்களின் குரல் பாராளுமன்றத்திலும் உலகின் அனைத்து பாகங்களிலும் ஒலிக்க வேண்டும். விலங்கிடப்பட்ட முஸ்லிம்களின் சுதந்திரம் , உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் பெரும்பாண்மை மக்களுக்கு கிடைப்பது போலவே அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும். குறிப்பாக எம் சமூகத்து கிடைக்க வேண்டுமென்று எமது மறைந்த தலைவர் அவரது வாழ் நாளில் மூன்றிலிரண்டு பகுதியை அர்ப்பணித்து ஈற்றில் எங்களையெல்லாம் அரசியல் அனாதைகளாக்கி மறைந்து விட்டார்.
ஆனால் அதற்குப்பிறகு கடந்த 21 ஆண்டுகளாக மாரி மாரி வரும் அரசுகளால் எமது முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் இன்னல்கள் உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரிந்ததாகும். அதிலும் கடந்த நாண்காண்டுகளாக இன்னாட்டு இஸ்லாமியர்களுக்கு சொல்லொனா கொடுமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் சுமக்க நேரிட்டது மறுக்க முடியாததொன்றாகும்.
நமது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் சமயோசிதமாகவும் தைரியமாகவும் பேசி உரிமைகளை வென்று முஸ்லிம்களது சுபீட்சத்திற்காக வாதிட்டு எங்களுக்காக பணிபுரியவே எமது அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புகிறோம்.ஆனால் நடப்பதோ நேர்மாறானவைகளாகும்.
எங்கள் நோக்கம் திசைமாரிப்போய் அவரவர் சொந்த வாழ்வுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் விற்றுப்பிழைத்து காட்டிக் கொடுத்து வாழக்கூடிய ஒரு இழி நிலைக்கு சென்று விட்டார்கள் எமதுஅரசியல் தலைவர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற விருட்ஷத்தின் நிழலில் தங்க இடம் கொடுத்தோம். மரக்கிளைகளை தரித்து அவைகளை வெவ்வேறு இடங்களில் நட்டி புதிய கட்சி நாமங்களை சூட்டி தாய் மரத்தின் செழிப்பு் த்தண்மைையை இழக்கச்செய்து தங்கள் சுய இலாபங்களுக்காக தாய்க்கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். எல்லாம் வல்ல நாயன் பொறுமை வாய்ந்தவன். இப்படிப்பட்டவர்களின் அழிவு வெகு தூரத்தில் இல்லையென்பதை கட்டியம் கூறுகிறேன். நிச்சயமாக மிக விரைவில் அல்லாஹ் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவான் என்பது எனது அசையாத நம்பிக்கை யாகும்.
இன்று 11.9. எமது புத்தள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
(புத்தள மாவட்ட பதில் அமைப்பாளர்) எஸ்.எச். எம்.நியாஸ் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் மிகவும் வேதனையுடன் இன்றைய அரசியல் வாதிகள் எப்படி அநியாயத்திற்கு துனை போகிறார்கள் என்பதனை மிகவும் அழகாக எடுத்துறைக்கிறார்.இவர் இதயச்சுத்தியுடன் தைரியமாக முன்னால் மாகாண சபை உறுப்பினராகவும் இவ்வளவு காலம் புத்தளத்து முஸ்லிம்களை வழி நடத்திச் செல்பவராக தனது கடமைகளை சரிவர செய்தவராக இன்று எமது பாசறையிலுல்ல எம் பீக்களுக்கும் சேர்த்து தனது ஆதங்கத்தை கொட்டுகிறார் .இதே நிலைப்பாடுடன்தான் ஏனைய உயர்பீட 80% அங்கத்தவர்களும் இருக்கின்றனர். தலைவர் மேல் உள்ள அன்பும் அபிமாணமும் தான் இவர்களைகட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது..
ஆனால் கட்சியின் பின்னடைவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போவது தலைவருட்பட கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். எங்கள் தலைமை ஏண்தான் மௌனமாகஇருக்கிறார் என்பதும் இங்கு ஒரு கேள்விக்குறியே.
கட்சியின் முக்கியமான உறுப்பினர் பதவி விலகும் போது அந்த வெற்றிடத்திற்கு இன்னொருவரை நியமிக்கும்போது கட்சியின் முன்னேற்றத்தை அவசியம் கவணத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 16.9.21 எங்களை விட்டு மறைந்த ஸ்தாபகத் தலைவரின் நினைவாண்டு நாளென்பதால் அன்னாரின் பாவ விமோட்ஷனத்தின் பொருட்டு குறைந்தது ஒரு கதமுல் குர்ஆனை நடத்த வேண்டுமென்று தலைவர், புதிய தேசிய அமைப்பாளர் மற்றும் கொழும்பின் பதில் மாவட்ட அமைப்பாளர் போன்றோரிடம் வேண்டியிருக்கின்றேன்.இன்ஷா அல்லாஹ் இதற்காகாஆவன செய்வார்களென்று நினைக்கிறேன்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பாக எமது ஸ்தாபகத் தலைவரின் நினைவேந்தல் மாறிவிடக்கூடாதன்பதில் நான் தெளிவாக உள்ளேன்.
நான் உங்கள்
T. m. Anwar-Ulmodeen
Deputy Leader/SLMC



0 Comments