Ticker

6/recent/ticker-posts

தனிப்பட்ட தரவுகளை திருடும் கும்பல்- ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆபத்து

தொழில்நுட்ப வளர்ச்சி பல நன்மைகயை நமக்கு அள்ளி கொடுத்தாலும் ஒரு சிலரால் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு ஆபத்தாகவும் மாறி வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி வருகிறார்கள்.

அவர்களின் தனிப்பட்ட தரவுகளை திருடும் கும்பல் பல விதங்களில் ஆண்ட்ராய்டு மொபைல்களை குறி வைத்து வருகின்றது.

தற்போது, ஆண்ட்ராய்டு ஆப்களில் உள்ள ஒரு புதிய ஸ்பைவேர் உங்கள் ஃபோனில் உள்ள தனிபப்ட்ட புகைப்படத்தினை திருட முயற்சிப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களை குறிவைக்கும் அந்த ஸ்பைவேரின் பெயர் phone spy app என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்பைவேர் 20க்கும் மேற்பட்ட ஆப்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு போன்களில் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுளளன.
தொலைபேசி உளவாளி (phone spy app) உங்களுக்குத் தெரியாமலே உங்களைப் பற்றிய விவரங்களை மட்டுமில்லாமல், உங்களைச் சுற்றி இருக்கும் விஷயங்களையும் சேகரிக்கும், பதிவு செய்யும்.

இந்த ஸ்பைவேர் இருக்கும் செயலிகள் பார்ப்பதற்கு மிக மிக உண்மையான பாதுகாப்பான செயலிகள் போலவே தோற்றமளிக்கும்.

தொலைபேசி உளவாளி (phone spy app) இருக்கும் செயலிகள் இன்னும் கூகுள் பிளேஸ்டோரில் அதிகராப்பூர்வமாக லான்ச் செய்யப்படவில்லை.

போன்ஸ்பை என்பது ஒரு என்ற ஒரு புதிய ஸ்பைவேர் பற்றிய பாதிப்பை தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தொலைபேசி உளவாளி (phone spy app)இல் இருக்கும் ஆப்களை நீங்கள் பயன்படுத்தும் போது, அதன் மிகப்பெரிய ஆபத்தாக, உங்கள் மொபைல் பாதுகாப்பு ஆப்களை (Security settings) தானாகவே அது அன்இன்ஸ்டால் செய்து விடும் அல்லது செயலிழக்கச் செய்யும். மொபைலுக்கு பாதுகாப்பு அளிக்கும் சில ஆப்ஸ்களை மறைப்பது மட்டும் பிரச்சினையாக இருக்காது.

ஆனால், அதையும் தாண்டி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதில் மிகப்பெரிய ஆபத்தாக phone spy app உங்களின் ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் கேமராவை அக்சஸ் செய்யும் என்று கூறப்படுகிறது.

கேமரா அக்சஸ் இருக்கும்பொழுது யூசர்களுக்குத் தெரியாமல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரெக்கார்ட் செய்கிறது. பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் உங்களை தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு பயன்படுத்தபப்டுகிறது மற்றும் மிகப் பெரிய அளவில் பிளாக்மெயில் செய்யப்படும் ஆபத்தும் உள்ளது.

சில நேரங்களில் உங்களுக்குத் தெரியாமல், நீங்களே phone spy app ஸ்பைவேர் உள்ள ஆப்களை டவுன்லோடு செய்தால், கூடுதல் விழிப்புடன் இருந்தால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

பொதுவாக சில ஆப்களை டவுன்லோடு செய்யும் போது, ஸ்டோரேஜ், அழைப்புகள், செய்திகள் உள்ளிட்டவற்றை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். ஆனால், phone spy app ஸ்பைவேர் உள்ள ஆப்கள் கூடுதலாக பல அனுமதிகளைக் கேட்கும்.

அவ்வாறு ஏதேனும் செயலி அதிகப்படியான அனுமதிகள் அல்லது செக்யூரிட்டி சார்ந்த அனுமதிகள் கோரினால், நீங்கள் உடனேயே அந்த செயலியை நீக்கி விடுங்கள்.

கவனிக்காமல், எல்லா கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கிவிட்டால், உங்கள் ஒவ்வொரு செயல்பாடும் மறைமுகமாக கண்காணிக்கப்படும். phone spy app ஸ்பைவேர் கிட்டத்தட்ட இருபத்திமூன்று செயலிகளில் ஒரு பகுதியாக மருந்து செயல்படுகிறது.

எந்தெந்த செயலிகளில் phone spy app ஸ்பைவேர் இருக்கிறது என்பது பற்றிய விவரங்கள்



Post a Comment

0 Comments