Ticker

6/recent/ticker-posts

கோவையில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் கூட்டம்


22-10-2021 கோயம்புத்தூர் வணிக பொருட்கள் உற்பத்தியாளர் சங்க வளாகத்தில் வைஷ்ணவி அரங்கத்தில் கோவை மாவட்ட அளவிலான அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது...

கூட்டத்திற்கு கவிஞர் கோகுலன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்... கவிஞர் இளம்விழியன் ஐயா அவர்கள் வரவேற்புரை கூறி., இந்த 2021ஆம் ஆண்டு தமிழக  அரசால் தேர்வான கோவை மாவட்டத்தைத் சேர்ந்த  ஐந்து அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான ஊக்கத் தொகை இதுவரை வழங்கப்படாததை நினைவூட்டி அதனை விரைந்து வழங்க ஆவன செய்யவும்., அகவை முதிர்ந்த தமிழறிஞர் களுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தந்தருள தமிழக அரசை வேண்டியும் உள்ளிட்ட தீர்மானங்களை
முன்மொழிந்தார்...

கூட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் திருக்குறள் முனைவர் அன்வர் பாட்சா,சூலூர் கலைப்பித்தன், குரு பழனிச்சாமி,பிரகஸ்பதி, நம்பிக்கை நாகராஜன், அழகுதாசன், துடுப்பதி ரகுநாதன்,இரவீந்திரன், திருமதி பிரேமா, கு.கணேசன்,பாரதி சன்முகம்,தர்மலிங்கம், தமிழ் மாணிக்கம்,பீனிக்ஸ் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்...

Post a Comment

0 Comments