பெற்றோரை பேணுவோம்!

பெற்றோரை பேணுவோம்!

எம்மை பெற்றெடுத்த எம் பெற்றோரை நாம் எம் கண் போல காக்க வேண்டும்.அவர்களை உதாசினப்படுத்தவோ ,அவமானப்படுத்தவோ  கூடாது.

நேற்றய பிள்ளைகள் இன்றய பெற்றோர்கள்.இன்றய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள்.

இதுவே வாழ்க்கை வட்டத்தின் இயல்பு.

ஆனால் நம்மில் சிலர் இவ்வுலகிற்கு எம்மை அறிமுக படுத்திய எம் பெற்றோரை மறந்து விடுகிறோம்.

அவர்களை மதிக்க தவறிவிடுகிறோம்.

அவர்களை தரக்குறைவாக நடாத்துகின்றோம்.

அவர்களுக்கு தேவையான எதையும் செய்து கொடுப்பதில்லை.

அவர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.

பெற்றோருக்கு தேவையான எதையும் செய்ய தவறிவிடுகின்றனர்.

அவர்களின் கைகளை பிடித்தவண்ணம் அவர்களின் நிழலிலே நடந்தோம்.

சுயமாய் நடைபழகியதும் அவர்களை மறந்து விட்டோம்.

தாயின் உதிரம் பாலாகியது.தந்தையின் வியர்வை எமக்கு பலமாகியது.

எமக்காய் பல சுகங்களை இழந்துள்ளனர்.

எம்மை எத்துன்பமும் தீண்டக்கூடாது என கரிசணையோடும்,அன்போடும் எம்மை வர்த்தனர்.

ஆனால்!
அவ்வாறு எம்மை வளர்த்த எம்மில் சில பெற்றோரின் நிலை என்ன..?

அவர்கள் படும் துயர் என்ன..?

சிந்தும் கண்ணீர் என்ன..?

சிந்திக்க வேண்டாமா...?

உதிரத்தை பாலாய் கொடுத்த ,வியர்வையைபலமாக்கி தந்த சில பெற்றோர் ஆசிரமங்களில்.

இன்னும் சிலர் தெருக்களில்.

சிலர் வீடுகளிலேயே வேலைக்காரர்களை போன்று இருக்கிறார்கள்.

நாம் நம் பெற்றோரை எவ்வாறு கவனிக்கிறோமோ..?

அதே போன்று நாளை நம் பிள்ளைகள் நம்மை பார்க்கும்.

"நல்லதை விதைத்தால் மாத்திரமே நல்லதையே அறுவடை செய்ய முடியும்"

நம் செயலே நம்மை நிர்ணைக்கும்.

தமபதிகளாக வாழும் போது ஒரு கோட்பாட்டுடன் வாழுங்கள்.

" உன் பெற்றோர் என் பெற்றோர் போலாவார்.என் பெற்றோர் உன் பெற்றோர் போலாவார்" எனும் ஒரு  கோட்பாட்டுடன் வாழ பழகினால்
எதிர் வரும் எம் சந்ததினர் பெற்றோரை பேணுபவர்களாக இருப்பார்கள்.

அவ்வாறு அமைந்து விட்டால் காலப்போக்கில் ஆசிரமங்கள் தேவைப்படாது.சிந்திப்போம்...செயல்படுவோம்..எம் பெற்றோரை நாம் பேணுவோம்..

Post a Comment

Previous Post Next Post