Ticker

6/recent/ticker-posts

விராட் கோலியை விட 2 கோடி அதிகம்.. ஐ.பி.எல் வரலாற்றில் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய – கிளாசன்

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இந்த மாதம் இறுதியில் நடைபெற இருப்பதினால் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

இதன் காரணமாக நேற்று அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் பல்வேறு அணிகளில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில அணிகள் தங்களது கேப்டனையே அணியில் இருந்து வெளியேற்றி அதிரடி காட்டி இருந்தது.

அதேபோன்று ஒரு சில அணிகள் தங்களுக்கு தேவையான முக்கிய வீரர்களை பெரிய தொகைக்கு மீண்டும் தக்கவைக்க வைத்து உரிய சம்பள ஒப்பந்தத்தை வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த மெகா ஏலத்தின் போது அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த கிளாஸன் ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியில் முதல் வீரராக கிளாஸனுக்கு 23 கோடி சம்பளம் வழங்கப்பட்டு அவர் முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி பெங்களூரு அணியின் சார்பாக 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் அதிகபட்ச சம்பளம் வாங்கிய வீரர் என்ற வரலாற்று சாதனையை கிளாசன் நிகழ்த்தியுள்ளார். வெளிநாட்டு வீரராக இவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தாலும் இந்திய வீரர்களில் ஒருவர் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக விராட் கோலி 21 கோடி வாங்கியதன் மூலம் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருக்கு அடுத்து நிக்கோலஸ் பூரான் 21 கோடி ரூபாயும், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சஞ்சீவ் சாம்சன், ஜஸ்ப்ரீத் பும்ரா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பேட் கம்மின்ஸ், ரஷீத் கான் ஆகியோர் 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments