Ticker

6/recent/ticker-posts

கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தும் சைக்கிளோட்டிகளுக்குச் சிறை

ஜப்பானில் சைக்கிளோட்டிகள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டம் நடப்புக்கு வருகிறது.

சைக்கிளோட்டும்போது அவர்கள் இனி கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.

அப்படிப் பயன்படுத்தினால் 6 மாதம் வரை சிறைத்தண்டனையோ 100,000 யென் (868 வெள்ளி) வரை அபராதமோ விதிக்கப்படலாம்.

ஜப்பானில் சைக்கிள்களை நடைபாதைகளில் ஓட்ட அனுமதி உண்டு.

ஆனால் அவை தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ளன.

சைக்கிளோட்டிகள் குறிப்பாக கைத்தொலைபேசி பயன்படுத்தும்போது நேர்ந்த விபத்துகளில் பாதசாரிகள் மாண்டதாக அரசாங்கம் சொன்னது.

மதுபோதையில் சைக்கிளோட்டுவோருக்கு இனி 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ 500,000 யென் வரை அபராதமோ விதிக்கப்படலாம்.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments