உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் 31-10- 2021 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு கோவை,காந்திபுரம்,சிபி ஐ.ஏ.எஸ் அகடாமி., சௌமியா காம்ப்ளக்ஸ் 4 ஆம் தளத்தில் நடைபெற்றது.
முனைவர் அரங்க. கோபால் முன்னிலை வகித்தார்.செயலாளர் கவிஞர் ந.கணேசன் வரவேற்றார்.நிர்வாகப் பொறுப்பாளர்கள் புலவர் மாரப்பன்,கவிஞர் சேகர்,பேரூர் இரவி,ஓவியச் செம்மல் ஈஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 1)திருக்குறள் எளிதாக மக்கள் மன்றத்தை அடைய ஆவன செய்தல், 2) உறுப்பினர்கள் சேர்த்தல்,போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கலைமாமணி மு.பெ.இராமலிங்கம் நன்றி நவில நிகழ்வு இனிதே நடந்தேறியது.


0 Comments