ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன் வருமாறு உலக நாடுகளுக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில், நேற்றைய தினம் சீன அதிபர் ஜின்பிங் (Jinping) மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தான் கள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் உலக நாடுகள் பொருளாதார உதவிகள் வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சீனா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வணிகம் மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடிய போது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அத்துடன் கொரோனா பாதிப்பை கையாண்ட விதத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
சீன அரசு வளர்ந்து வரும் நாடுகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதற்கும், பாகிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வருவதற்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளதாக மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


0 Comments