சளித் தொல்லை நீங்க சில எளிய முறைகள்

சளித் தொல்லை நீங்க சில எளிய முறைகள்

நுரையீரலில் சளி அதிகரிக்க, அதிகரிக்க உடலின் இயக்கமானது குறைக்கப்படுகிறது. சளியானது ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். நம்முடைய எலும்புகள் அனைத்தையும் தளர்ந்து போக செய்யும். சளி தொல்லை நம் மூக்கை அடைத்துக் கொண்டு சளி உருவாக்குவது என்று மட்டும் நினைத்து விடாதீங்க. நம் நுரையீரலில் இரக்கும் சளி எப்போதும் இருந்துக் கொண்டு தான் இருக்கும். இந்த நுரையீரலில் இருக்கும் சளியை இயற்கை மருத்துவத்தால் சரி செய்யலாம்.
நுரையீரலில் இருக்கம் சளியை எப்படி போக்குவத்தைப் பற்றி பார்ப்போம் -

சுடுநீர் சுடுநீரை எப்போதும் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இந்த சுடுநீர் நெஞ்சு பகுதியில் சளி தேங்குவதைத் தடுத்து நிறுத்தும். சுவாசப் பாதையில் உள்ள சளியை எளிதில் வெளியேற்றி விடும். ஆகவே, நாள்தோறும் குளிர்ந்த நீரைப் பருகாமல் சுடுநீரைப் பருகுவது மிகவும் சிறந்தது. இந்த பழக்கத்தை இனி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ப்ளாக் காபி

சளித் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ப்ளாக் காபி குடித்தால் போதும். தற்காலிக நிவாரணம் கிடைப்பதோடு, நெஞ்சு பகுதியில் உள்ள சளியை இளக உதவி செய்யும். ஆனால் ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காப்ஃபைன் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

மஞ்சள்

சுடுநீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, வாயை கொப்பளித்தால் மஞ்சளில் உள்ள குர்குமின், சளியை இளகச் செய்யும். இதனால், நெஞ்சு சளிக்கு நிவாரணம் கிடைக்கும். மஞ்சளில் உள்ள மருத்துவ பண்புகள் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டவை. சளி, இருமல் இரண்டு தொல்லையிலிருந்து நாம் விடுபட்டு விடலாம்.

ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தல் என்பது ஒரு அற்புதமான மருத்துவக் கலை. இதற்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த நோய் வந்தாலும் மிகச் சிறந்த மருத்துவம் ஆவிபிடித்தல் மட்டுமே. நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழித்து விடும்.

மிளகு

மிளகு சிறந்த மருத்துவ உணவுப்பொருள். மிளகின் காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.     

Post a Comment

Previous Post Next Post