Ticker

6/recent/ticker-posts

சிறுபான்மையினத்திற்கு எதிரான இலங்கை ஜனாதிபதியின்பகிரங்க வன்முறை

இலங்கை ஜனாதிபதி கோட்டபாயவின் ஒரே நாடு ஒரே சட்டம் உலகெங்கும் பேசும் பொருளாக இருக்கின்றது.

சிறுபான்மை மக்ககளை இலக்காகக் கொண்டு நியமிக்கப் பட்டுள்ள ஜனாதிபதியின் பணிக்குழு குறித்து சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் (ஐசிஜே) தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் சமீப காலங்களாக நடந்து வரும் இனக்கலவரங்களுக்கு காரணகர்த்தாக விளங்கிய தீவிரவாதியான கலகொடத்தே ஞானசாரவை பணிக்குழுவின் தலைவராக நியமித்துள்ளது மிகவும் ஆபத்தான ஒரு செயல் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள் .

ஜனாதிபதியின் இச்செயல் இலங்கை வாழ் சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டு  6 மாத சிறைத்தண்டனை பெற்று விடுதலையானவர்தான் இந்த .கலகொடத்தே ஞானசாரர்

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இனக் கலவரங்களுக்கு தூண்டுகோலாக செயல்பட்டவர் ,,செயல்படுகின்றவர்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்,

இனங்களுக்கிடையே பிளவுகளை உண்டுபண்ணியவர்.

சிறுபான்மை மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாட துணை நின்றவர்.பல உயிகள் பலியாவதற்கு துணை நின்றவர் 

இப்படி பல குற்றங்களுக்கு துனை நின்ற ஒரு பயங்கரவாதியை பணிக்குழுவின் தலைவராக நியமித்துள்ளது மிகவும் பாரதூரமான விடயம்.

கலகொடத்தே ஞானசாரவை பணிக்குழுவின் தலைவராக நியமிக்கமுடிவு செய்தமை குறித்து ஐசிஜே அமைப்பு தமது கவலைகளை வெளிப்படுத்தியதோடு, தமிழ் சமூகத்திடமிருந்து பிரதிநிதித்துவம் இல்லாதது மற்றும் பணிக்குழுவில் பெண் உறுப்பினர்கள் இல்லாதது ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

நீதிமன்ற அவமதிப்புக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நபரை தலைவராக நியமிக்கப்பட்டது - இந்த நியமனங்களின் பின்னணியில் உள்ள நோக்கத்தை பகிரங்கமாக வன்முறை மற்றும் இனவாத அழைப்புகள் கேள்விக்குள்ளாக்குவதாக அறியப்படுகிறது," என்று ஐசிஜே ட்வீட் செய்துள்ளது.

இன்று பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு இப்படியொரு முடிவை ஜனாதிபதி எடுத்தது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது.

சிருபான்மையினத்திற்கு எதிரான பகிரங்க வன்முறை என்று தெளிவாகப் புரிகின்றது. 

Post a Comment

0 Comments