Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-10

குறள் 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

மாப்ள.. ஒனக்கு நெறைய எதிர்ப்பு இருக்கலாம். ஆனாலும் யாரையும் எதுத்து நிய்க்கக்கூடிய தெம்பும் இருக்கலாம். கூடவே போராடுததுக்கு நல்ல பாதுகாப்பும் இருந்துட்டுன்னு வச்சுக்க.. அதுனால ரொம்ப பலன் உண்டு மாப்ள.. 

குறள் 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

மாப்ள.. எந்த எடத்துல வச்சு எப்படி தாக்கணுங்கிற வித்தையை தெரிஞ்சு வச்ச்சிருக்கணும். நம்மளை சாய்க்கணும்னு நெனச்சுருந்த எதிராளிங்க இதை தெரிஞ்சுக்கிட்டதும், துண்டைக் காணும், துணியைக்காணும்னு ஓடிருவாவொ.. 

குறள் 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

மருமவன... நம்ம தெரு மத்தில மேக்கோரமா இருக்க கோயில் தேரை பாத்திருப்ப. அதோட பைதால்லாம் ரொம்ப பெருசா இருக்கும். அந்த தேரு கொயில் திருளா காலத்துல நம்ம ரத வீதியில ஓடும். ஆனா அதால கடல்ல ஓட முடியாது. 

கொஞ்ச நாளைய்க்கு முன்னால தூத்துக்குடி தொறை முகத்துக்கு போயி, ஒரு  கப்பலை பாத்திட்டு வந்து, மாமா..கப்பல் ரொம்ப பெருசா இருந்துச்சுன்னு ஏங்கிட்ட சொன்னிய மருமவன. அந்த கப்பல் கடல்ல மட்டுந் தான் ஓடும். அதால தரையில ஓட முடியாது. 

இதை எல்லாம் நாம தெளிவா தெரிஞ்சுகிடணும் மருமவன. 

குறள் 502.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

தப்புத் தண்டா எதுக்கும் போகாதவனா இருக்கணும்.  கெட்டபேரு வந்திரக்கூடிய வேலை எதையும் செய்ய பயப்படுதவனா இருக்கணும். 

இப்படிப் பட்டவன், நல்ல பண்பாடு இருக்க குடும்பத்துல பொறந்தவன்னு தெளிவா தெரிஞ்சுக்கலாம். 

குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

ஒரு சிலர் அரிய நூல்களையெல்லாம் படிச்சவங்களா  இருக்கலாம். எந்த குத்தமும் சொல்ல முடியாதவொளாவும் இருக்கலாம். 

இப்பிடிப் பட்ட  ஆளுங்களை நல்ல ஆழமா ஆராய்ஞ்சு பாத்தம்னா, அவொட்டயும் அறியாமை  இல்லவே இல்லைன்னு  அடிச்சுச் சொல்லிற முடியாது.(தொடரும்)


Post a Comment

0 Comments