
நாம் வாழும் பூமி மர்மம் நிறைந்த ஒன்று என்பது எமக்கு தெரிந்ததே. ஆனாலும், சில மர்மங்கள் எம் கண்முன்பு நடந்து கொண்டிருப்பதை அதற்கான விடைகளை ஆராய முடியாது.
அது மட்டும் இன்றி உலகில் மனித இனம் பல ஆபத்துகளை சந்தித்து வருகின்றது.
அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டுதான் பாம்பு தீவு.
பிரேசிலில் உள்ள சாவோ பாலோ கடற்கரையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இல்ஹா டா குய்மாடா கிராண்டே தீவு. இந்த தீவு பொதுவாக பாம்பு தீவு என அழைக்கப்படுகிறது.
இந்த தீவு மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் கிடையாது.
அந்த தீவுக்கு ஓய்வெடுக்க வரும் இடம்பெயரும் பறவைகளை அந்த பாம்புகள் உணவாக கொள்கின்றன. அந்த தீவுக்கே உரிய தனித்துவமான விஷயமாக ஒரு பாம்பு இனம் உள்ளது. அதன் பெயர் கோல்டன் லான்ஸ்ஹெட்ஸ்.
இந்த பாம்பு இனம் இல்ஹா தீவை தவிர உலகில் வேறு எங்கும் இல்லை. பூமியிலுள்ள முக்கியமான விஷ ஜந்துக்களில் இந்த பாம்பும் முக்கியமானதாக உள்ளது. கோல்டன் லான்ஸ்ஹெட் என்பது லான்ஸ்ஹெட் என்னும் பாம்பு இனத்தின் ஒரு பகுதியாகும்.
உடலுக்குள் சென்று வேகமாக செயல்படும் விஷத்தை இந்த பாம்புகள் கொண்டுள்ளன.
அதனுடன் தொடர்புடைய இனமான ஜரராகா என்னும் இனத்தை விட கோல்டன் லான்ஸ்ஹெட் ஐந்து மடங்கு சக்தி வாய்ந்த விஷத்தை கொண்டது.
பாம்புகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற காரணத்தால் பிரேசில் அரசாங்கம் அந்த தீவுக்கு மனிதர்கள் செல்ல தடை விதித்துள்ளது.
இந்த தீவுக்கு வருவது சட்ட விரோதமான மற்றும் ஆபத்தான செயலாகும்.
இந்த தீவுக்குள் வரவேண்டும் என்றால் அதற்கு பிரேசிலின் கடற்படையின் அனுமதி வேண்டும்.
அந்த பாம்புகள் ஒரு வேளை கடித்துவிட்டால் அவற்றிற்கான மாற்று மருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவோ பாலோவினில் உள்ள புட்டாண்டே என்னும் நிறுவனத்தில் உள்ளது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments