அ முதல் வரை
எல்லாமே நான்தான்
செத்துப் பிழைத்தாலும்
சொல்ல இனிக்கிறது
இறக்கி வைக்கத்தான்
பேராசை என்னுள்
ஏறிச் செல்கின்றன
அன்றாடத்தின் அசூசைகள்
கற்பனைகள் கனவுகளாகட்டும்
கனவுகள் நனவுகளாகட்டும்
நனவுகள் சாதனைகளாகவும்
சாதனைகள் சரித்திரங்களாகவும்
உன்னிடம் தேடுகிறேன்
தாயின் முழுமையை
என்னுள் நிறைகிறது
தெய்வ அம்சம்
இரைச்சலும் உண்டு
பேரமைதியும் உண்டு
என்னில் உன்னிசை
ஆன்மாவின் சங்கீதம்


1 Comments
எனது தன்முனைக்கவிதைகளை ... சிறப்பாக வெளியிட்ட ஆசிரியருக்கு எனது வணக்கங்கள்... அருமை இதழ்... வாழ்க வளர்க!
ReplyDelete