Ticker

6/recent/ticker-posts

அடங்காத குதிரை


என் குதிரையை
கேட்டு வந்திருக்கிறாய்
நீ சாமார்த்தியசாலி
என் குதிரை
உன் கட்டுக்குள் வருமா?
பலமுறை
என்னைக் கவிழ்த்திருக்கிறது
உனக்கது தெரியாது.
உன்னிடம்
நானதைச் சொல்லி இருந்தால்
என் குதிரையை கேட்டு
வந்திருக்க மாட்டாய்.
யாருக்குமே
அடங்காத குதிரை 
என் குதிரை
நீ சாமார்த்தியசாலி
விழவும் எழவும் பழகிக் கொள்.

Post a Comment

0 Comments