Ticker

6/recent/ticker-posts

கறுப்பி....!


கரையும் காக்கைகள் போலவும்
ஊர்ந்தூடும் கறுத்த பூச்சிகள் போலவும்
நான் நிறமற்றவள் தான்..!! 

மூக்குத்திட்டாற் போல
தடித்தொரு மச்சமும்
கலரேயில்லாத உதடுகளும் 
என்னது தான்...! 

கருத்த வானில் மின்னும்
நட்சத்திரங்களை 
ஆதாரிப்பவர்களவர்கள்...
எனினும்,,
கல்யாணச் சந்தையில்
எனது நிறம் பேசுபொருள்..! 

அமுதூட்டிய அன்னையின்
கருவறை...
மண்ணுக்கு செழிப்பூட்டும்
மழை முகில்...
நிலவுக்கு நிறம் கொடுக்கும்
வானப்போர்வை...
எல்லாமே ரசிக்கத்தக்க கருப்பு தான்
அவர்களுக்கு
எனினும்,,
எனது நிறம் மட்டும்
தீண்டாமையாக..!! 

இருக்கட்டும்...
இருட்டு இல்லா ஒரு நாள்
வாழ முடியுமா என்ன...
அதுபோல்
கருப்பு எனக்கும்
கனவு சிலிர்க்காதா என்ன..!! 

கருப்பு..
ஒரு நிறமேயன்றி-அது
ஒன்றும்..
சாபக் கேடில்லை...!!
மேலும்,
என்னதும் உன்னதும்
இரத்தத்தின் நிறம்
சிவப்பெயன்றி வேறில்லை..!! 

கலர் தான் கருப்பே தவிர
கல்பொன்றும் கருப்பில்லை..
பலர் தான் வெறுப்பு தவிர
கத்ரில் என்றும் மறுப்பு இல்லை..!! 

    

Post a Comment

0 Comments