Ticker

6/recent/ticker-posts

தீர்வென்னவோ?


பண்பாடெனும் பெருவனத்தில்
பூத்திட்ட கோடான
கோடி மலர்களும் மரங்களும்
காய்ந்து உதிர்ந்து விட்டது

கறைகள் பலவை
இன்று
காட்டுத்தீயாய்
பற்றிக் கொண்டது

குயில்களின் இன்னிசை
கழட்டப்பட்டு
கழுகுகளின்
குடியேற்றம் வந்தது

வானவில் வண்ணங்கள்
அழிக்கப்பட்டு
வன்மத்தின்
வாசங்கள் பரப்பட்டது

நல்கலாச்சாரங்களின்
கண்ணியங்கள்
தகர்க்கப்பட்டு
நவ கலாச்சாரங்கள் 
புண்ணியங்களானது

சீற்றங்கள் சித்திரங்களாக 
உருப்பெற்றது
ஏமாற்றங்களும் எளிதில்
ஏற்றம் பெற்றது

மதுவினாலே மனக்குறை
தீருமென்றும் போதிக்கப்பட்டது
மனித உருவில் சாத்தன்களின் 
சாயல்களும் அரங்கேற்றப்பட்டது

அகங்களெல்லாம்
அஞ்ஞானமெனும்
அவ ஞானத்தால்
அலங்கரிக்கப்பட்டது

வெண்மதியாய் ஒளி வீச
காக்கைகளாய் கூடி வாழ
வண்ணத்துப்பூச்சிகளாய் 
வண்ணங்கள் செய்ய
மேகங்களாய் மெண்மையாயிட
தென்றலாய் மெல்லிசை பாடிட
மறுத்தே நிற்கும் மனித உருவம்
பூண்டிட்ட மாக்களுக்கு
தீர்வென்னவோ?
என்னிறையோனே 
தீர்வென்னவோ ?



Post a Comment

0 Comments