Ticker

6/recent/ticker-posts

எனது பெயர் நன்றிக்கடன்


இன்று 2021/11/28 ஞாயிற்றுக்கிழமை

மறக்கக் கூடாத மனிதனை  மறந்து விட்டார்களோ என்று நினைத்து நினைவு படுத்த நினைக்கும் நான் நன்றிக்கடன்


2021/March 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேள்விப் பட்டவுடன் எனது உயிர்  பிரிந்தது போல ஒரு உணர்வு

கைது செய்யப்பட்டு இன்றுடன்  8 மாதங்களும் 6 நாட்களும் ஆகின்றன

ஒவ்வொரு தினமும் நீதிமன்றத்திட்கு அழைத்து வரும் போது பல துஆ பிரார்த்தனைகளுடன் எதிர்பார்த்து இருந்த நான் நன்றிக்கடன்

சமூகத்தின் நன்றிக்கடனாக நீதிமன்ற வாசலில்  சென்று நிற்க வேண்டும் என்று நன்றிக்கடனாக நான் நினைத்தாலும் Corona வும் பயணத் தடையும் என்னை செல்ல விடாமல் தடுத்து விட்டது

எமது உரிமைக்குரல் அசாத் சாலி இன்று விடுதலை ஆக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஆவலாய் காத்திருந்து.ஒவ்வொரு நாளும் ஏமார்ந்து போன வனாக செய்திகளை பார்த்து கவலையோடு நின்ற நான் நன்றிக்கடன்

சென்ற முறை வந்த போது உரிமைக்குரல் அசாத் சாலி விடுதலை செய்வார்கள் என்று நினைத்தாலும் 2/12/2021 தீர்ப்புக்காக திரும்பி வரவேண்டும் என்று நாள் குறித்து  எமது சமூகக் உரிமை குரலை மீண்டும் சிறைக்கு அனுப்பியது சட்டமன்ற நியதி

ஏமாற்றத்துடனும்  கவலையுடனும் நன்றிக்கடனாக நான் நின்றேன் அன்று
வருடம் பிறக்கும் போது பாடசாலை மாணவர்களின் அத்தியவசிய தேவைக்காக அசாத் சாலியை சந்தித்தேன்.

வீட்டில் பசி பட்டணி காக அசாத் சாலியை சந்தித்தேன்

மஹலின் திருமணத்திற்காக அசாத் சாலியை சந்தித்தேன்

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கு அசாத் சாலியை சந்தித்தேன்

தவறுகள் செய்யாமல் காவல்துறையில் சிக்கியபோதும் அசாத் சாலியை சந்தித்தேன்

ஆசிரியர்களுக்கு ஹிஜாப் உடைய பிரச்சினையின் போது அசாத் சாலியை சந்தித்தேன் 

ஜனாஸாக்களை எரித்த போதும் அசாத் சாலியை சந்தித்தேன்

அதேபோல் நன்றிக்கடனாக டிசம்பர் 2 ஆம் திகதியும் அசாத் சாலியை நீதிமன்ற வாசலில் சந்திப்பேன்

அனைவரும் உரிமைக்காக ஒன்று சேர்ந்து ஜனாசாக்களை எரிக்கும்போது அசாத் சாலியுடன் ஒன்று பட்டது போல. அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பு நாள்
2021/12/2 ஆம் திகதி எதிர்வரும் வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்பு நன்றிக் கடனாக  ஒன்றுபடுவோம்

ஒன்றாக நிற்கின்றோம் என்ற ஒரு செய்தியை  அசாத் சாலி அவர்களுக்கு வெளிப் படுத்துவோம்

தான் ஒரு பிரச்சினையில் சிக்குண்டு சிறையில் இருக்கும் போதும் மக்களின் துன்பங்களை கண்டு கவலைப்பட்ட ஒரு மனிதனாக நான் அவரை பார்க்கின்றேன்

ஒன்று பட்டு ஒற்றுமையாக நின்றாள் எதிரிகளுக்கு இறைவன் அச்சத்தை உண்டு பண்ணுவான்

சமூகத்தின் குரலுக்காக ஒன்று படுவோம் நன்றிக்கடனாக நானும் வருகின்றேன்

நன்றியுள்ள சமூகமாக  சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் வாருங்கள்

இப்படிக்கு நன்றிக்கடன்
உலகளாவிய சமூக வலைத் தளங்களில் நடுநிலைவாத அமைப்பு

Post a Comment

0 Comments