குவிந்தஉதடுகளும் சீரழிந்தகலாச்சாரமும்.

குவிந்தஉதடுகளும் சீரழிந்தகலாச்சாரமும்.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எனது திருமணநிகழ்வின் போது  எந்த ஒரு புகைப்படமோ வீடியோவோ எடுக்க எங்களது பெரியோர்கள் அனுமதிக்கவில்லை. ஏன்...??திருமண அழைப்பிதழில் மணமகள் பெயர் கூட  அச்சடிக்கப்படவில்லை. இன்னாரது மகள் என்று தான் குறிப்பிடப்பட்டு இருந்தது..

கிபி 2000வரை எங்கள் வீட்டுப் பெண்கள் 5ஆம் வகுப்பு தாண்டவில்லை 2015ல் தான் முதல் பட்டதாரிப் பெண்உருவானார்கள். 

இளைஞர்கள் இதனை ஆணாதிக்கம் என எதிர்த்து ஒருபுறம் இத்தகு நிலையிலிருந்து நமதுசமுதாயத்தை மாற்றி பெண்கள் கல்வி, பொருளாதார சார்பு நிலை என  முன்னேற்ற அரும் பாடு பட்டனர். 

விளைவு ...!!!

பெண்கள் கல்வியில் முன்னேற்றம். வாட்ஸப், ஃபேஸ் புக்,மற்றும்    இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கூட   நமது பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும்  அபரிமிதமாயின 

அறிவு பூர்வமான கருத்துகள் புரட்சிகரமான கவிதைகள்  பதிவு செய்து ஆணுக்கு பெண் இங்கே இளைப்பில்லை காண் என்ற  நிலை இருந்தது.  

  ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது 

அனைத்து  சமுதாயப்  பெண்களும் பெண் சுதந்திரம் என்ற பெயரிலும்  முன்னேற்றம் நாகரீகம் என்று  நினைத்துக் கொண்டும் ஹிஜாபு முறையை தகர்த்து,  நமது குர் ஆனிய வழிமுறைகளை மீறி,    பெண்களை   இன்றைக்கு வழிகேட்டில் தள்ளிக்  கொண்டிருக்கிறார்கள்

காதல் கவிதைகளுக்கு லைக் கொடுக்கிற சாக்கில்   கவிதாயினியின் புற அழகு வருணிக்கப்படுகிறது.  வயது முதிர்ந்த பெண்கள் தங்களது வாலிபப் பருவத்து புகைப்படங்களை  கூச்சமின்றி பதிவேற்றம் செய்கிறார்கள். 

ஆட்சேபனை தெரிவித்த ஒரு சில கிழடு கட்டைகள் பத்தாம் பசலிகள் என்று தூற்றப்படுகிறார்கள்  ஆலிம் அவ்வாம் என்றெல்லாம் இல்லாமல் ஷைத்தான் அனைவரின் மனதையும் கெடுக்க சூழ்ச்சி செய்கிறான்

 பெண்களை கேவலப்படுத்தும் வகையில் டிக்டாக் இன்னும் என்னென்னவோ கண்றாவிகள் வந்து விட்டன.   போதாக்குறைக்கு குவிந்த உதடுகளுடன் பெண்கள் பதியும் செல்ஃபீக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. பெண்களை கேவலப்படுத்தும் வகையிலான பதிவுகள் தினசரி காண நேர்கிறது  பெண்கள் தொடர்ந்து  கேலிக்குள்ளாக்கப் படுகிறார்கள்.   

பெண்பிள்ளைகளைப்பெற்று கண்ணியத்துடன் வளர்க்கிற பெற்றோர் சுவனம் செல்வர் என்றும் தாயின் காலடியில் சொர்க்கம் என்றும்  பெண்ணின் பெருமை பேசிய நாம் சிந்தித்து செயல்படுவோம். 

பெண்களை மதிப்போம். 
கண்ணியம் காப்போம்.
இன்ஷா அல்லாஹ்..
பேருவளை ஹில்மி

Post a Comment

Previous Post Next Post