Ticker

6/recent/ticker-posts

இலங்கையில்20 வீதமானோர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்-இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க

நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளமையினால் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பலர் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை தவிர்த்து கடுமையான வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

வரிசையில் நின்றும் சில சமயங்களில் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியுள்ளது.

கையில் பணப் பற்றாக்குறையும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவைகள் மன அழுத்தம் அதிகரிப்பதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments