இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட தடை விதித்துள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டயட் பிளான் குறிப்புகள் வெளியாகியுள்ளது.
அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த வகையிலும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ( Beef And Pork)ஆகியவற்றை உட்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீரர்கள் ஹலால் முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் உணவுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


0 Comments