Ticker

6/recent/ticker-posts

மீளாத்துயரில் கிண்ணியா - video


இன்று காலை மீளாத்துயரில் கிண்ணியா மக்கள்.எங்கும் சோக மயம். வாய்விட்டு ஒப்பாரி. கதறி அழுகை. கண்ணீர் விடாத உள்ளம் இருக்கவே மாட்டாது என்பது உண்மை.  

பிள்ளைகளை கொஞ்சி அணைத்து ஆரத்தழுவி சென்று வா என்று பாடசாலைக்கு அனுப்பி வைத்த பெற்றோரை நினைத்து பார்க்கும் போது கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது.

நீண்ட நாட்கள் பாடசாலையைக் காணாத அந்த பிஞ்சுக் குழந்தைகளின் ஆசைகள் கனவுககளை சற்று கற்ப னை  பண்ணும் போது நெஞ்சு வெடிக்கப்பார்க்கிறது. 

சென்று வா  என் பாசமகனே! என் பாச மக்களே! என்று இன்று அனுப்பப்பட்ட அப்பாவிக் குழந்தைகள் ஜனாஸாக்களாக திரும்பி வருவதை  காணும் சோகத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் அந்தப்பெற்றோர்களும் உற்றோர்களும்? என்பதை நினைக்கும் நிலையில் கண்ணீர்மல்க இதனை எழுதுகின்றேன்.

எல்லாவற்றுக்கும் மூல காரணம் யார் என்பதையும் சித்திக்க கடமைப்பட்டுள்ளோம். 

அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். RDA யினுடைய கடமை என்ன? இவர்கள்தான் கட்டாயம் பொறுப்புக்கூற வேண்டும்

பொறியியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட சேவைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். 

அல்லது இந்தப்பாதையை முற்றாக நிறுத்தியிருக்க வேண்டும். பலர் இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டும் ஏன் பொறுப்புதாரிகள்  பொறுட்படடுத்தவில்லை? 

பிரேதேசபைத் தவிசாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லையா? 

பிரதேச செயலாளர் இந்த விடயத்தில் ஏன் பொடு போக்காக இருந்தார்? 

இவ்வாறான கேள்விகள் எழுகின்றன . 

எதுவும் இப்போது பலனளிக்காத நிலையில் என் உள்ளம் படும் வேதனை சொல்ல முடியாது. 

இன்று ஷஹீதான குழந்தைகள் எனது குழந்தைகள் என்றுதான் நினைத்து உலகமே இருண்டு போன நிலையில் மீண்டும் ஒரு சுனாமியை மனக்கண் முன்கொண்டு வந்த சோக சம்பவம் இது. 

சுனாமி நேரடி இறை சோதனை.

இது நமது மடத்தனத்தால் வந்த சோதனை. 

ஆழ்ந்த அனுதாபங்கள் என்று இலகுவில் என்னால் சொல்லிவிட முடியாது. 

சம்மந்தப்பட்டவர்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவுகளை இடுவதை  பார்க்க என்னால் முடியாது. 

எல்லாம் இறைவனின் நாட்டம். இதுவும் அவனின் நாட்டம் என்பதில் சந்தேகமில்லை. 

நேர காலத்தோடு வெளிக்கிடு மகனே! மகளே!  என்று சொன்ன அந்த பாச வார்த்தைகளை நினைக்கிறேன் படைத்தவனிடம் நேர காலத்தோடு அல்லவா இந்த ஆசை செல்ல வைத்து விட்டது.

انا لله وانا إليه راجعون  

நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கு சொந்தமானவர்கள் அவனிடமே மீள வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளுகிறோம் இறைவா! ஆனாலும் எந்தப்பாவமும் செய்யாத பச்சிளம் பாலகர்களை பாவம் செய்ய முன் உன்னிடம் அழைத்துக் கொண்டாயா? 

எல்லாவற்றிலும் நலவுண்டு என்று நம்புகிறோம். சுவனத்தில் ஹூருல் ஈன்களாகவும் முத்துக்கள் போன்ற  இந்த பிஞ்சுகளை சுவன செல்வங்களாகவும் ஆக்க நினைத்தாயோ! 

எல்லாம் அறிந்தவனே! உனக்குச் சொந்தமானவர்களை உன்னிடம் அழைத்துக்கொண்டாய். உனது முடிவை ஏற்றுக்கொள்கிறோம். 

أعظم الله أجركم وأحسن عزاءكم وغفر لميتكم  

அல்லாஹ் உங்கள்  கூலிகளை மகத்தானதாக ஆக்கி வைப்பானாக உங்கள் பிரிவுத்துயரை அழகாக ஆக்கி வைப்பானாக! உங்கள் மரணமானவர்களை மன்னிப்பானாக! 

என்று பிரார்த்திப்பதைத்  தவிர எங்களால் என்னதான்  செய்ய முடியும்? உள்ளமுருகி பிரார்த்திப்போம். பாசமிகு  
குழந்தைகளை இழந்து தவிக்கும் இவர்களுக்காகப்  பிரார்த்திப்போம். 

இதுதான் எம்மால் இப்போது செய்ய முடியுமான ஒரே ஒரு உதவி. 

ஆனாலும் .......


Post a Comment

0 Comments