Ticker

6/recent/ticker-posts

ஜனாஸாக்களை எரிக்கும்போது முஸ்லிம் சமூகம் கோமாவில் இருக்கவில்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் தெரிந்து கொள்ள வேண்டும்

ஜனாஸாக்களை எரிக்கும்போது முஸ்லிம் சமூகம்  கோமாவில் இருக்கவில்லை என்பதை  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் தெரிந்து கொள்ள வேண்டும் 


வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக  பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய  பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான்  தனதுரையில் , ஜனாஸா  எரிப்பு விடயத்தில்  தாம் அரசாங்கத்துடன் பேசி  தீர்வை பெற்றுத் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனாஸாக்கள்எரிக்கப்படும் போது,  முஸ்லிம்கள் கோமாவில் இருக்கவில்லை என்பதை இவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாஸா   எரிப்பு விடயத்தில்  கொடுமையையின்  அகோரத்தையும்,  அநியாயத்தின் உச்சத்தையும் தாங்க முடியாத மக்கள்  பாதையில் இறங்கி போராடியதன்  மூலமாகவும்,  வெளிநாட்டு தலையீடுகள் மூலமாகவுமமே  இழந்துபோன ஜனாசா  அடக்கும் உரிமையை மக்கள் பெற்றுக் கொண்டார்கள்.

20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு வாக்களித்த  எந்தஒரு பாராளுமன்ற உறுப்பினர்களும், எந்த ஒரு பா
போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை.  மக்களுடன் சேர்ந்து கூட இதற்கா போராடவுமில்லை.  தாம் 20 ஆம் திருத்த சட்ட மூலத்திற்கு  ஆதரவு அளித்ததற்காக  இவர்கள் அனைவரும்  அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து காத்து நின்றனர்.

இவ்வாறான நிலையில் இவர்களது சுய நோக்கமும், சுய இலாபம் கொண்ட அரசியலுக்கா,  மக்களது வெற்றியையும்  மார்க்க  உரிமைகளையும், கடமைகளையும்  பயன்படுத்த  முட்படுவதை இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவர்கள் பங்கு கொண்ட அரசாங்கத்தினாலும். இவர்கள் 20  ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையிலும், மக்களுக்கும்  சமூகத்திற்கும், எந்தவித  நன்மைகளும் உதவிகளும் செய்ய முடியாத நிலையில், 
ஜனாஸாவுக்கா மக்கள் போராடி பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றியில் பங்குகொண்டு குளிர்காய முயற்சிப்பதானது, இவர்கள் வெற்றியடைந்தது பாராளுமன்றம் சென்றாலும் , சமூகத்திற்கு செய்யவேண்டிய சேவையின் தோல்வியை சாமாதனப்படுத்த முற்படுவதாகும்.

இவர்கள் இந்தளவு மக்களை ஏமாற்றுவதற்கு முஸ்லிம் சமூகம் கோமாவில் இருக்கவில்லை என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தர்பம் வரும் போது இவர்களுக்கு முஸ்லிம் சமூகம் தகுந்த பாடம் கற்பிக்கும்.

Post a Comment

0 Comments