Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் கட்சிகளின் வரவு செலவு திட்ட உச்ச பீட மன்னிப்பு எப்போது வெளியாகும்?

இலங்கையில்  இனவாதம் அவ்வப்போது ஓரளவு நாட்டில் இருந்தாலும்,  தனித்துவம் காப்போம் என்ற போர்வையில், முஸ்லிம் கட்சிகள் என்று ஆரம்பிக்கப்பட்டதோ  அன்றிலிருந்து பேரினவாதிகளுக்கு, தங்களது இனவாத்தை  வளர்த்துக் கொள்ள அதுவே உதவியாக அமைந்தது.

மறு புறம்   தேர்தல் காலங்களில், பேரினவாதத்தை  காட்டி  முஸ்லிம் மக்களை பயமுறுத்தி முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று, பாராளுமன்றம் சென்று முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை  அடகு வைத்து,  விற்று  அரசியல் நடத்தும்  கலாச்சாரத்திற்கு முஸ்லிம் சமூகம்  இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகளால் முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டது போல், துரோகமும் ஏமாற்றமும், வரலாற்றில் ஒரு போதும் முஸ்லிம்  சமூகத்திற்கு ஏற்படவில்லை.

கடந்த  கால  தேர்தல் மேடைகளில்  பேரினவாதிகளின்  சூடான  இனவாதத்தை  பேசி இவர்கள் மக்களிடம்  வாக்குகளை சேகரித்தை  நாம் மறக்கவில்லை.

மொட்டு ஹராம் ஹாராத்தின் பக்கம்  செல்லக்கூடாது  என முஸ்லீம் சமூகத்தை  இனவாதிகளிடமும்  பெரும்பான்மை மக்களிடமும் விரோதிகளாகக்காட்டி, இவர்கள் நடத்திய அரசியல் நாடகத்தை நாம் கண்டோம்.

இவ்வாறான அரசியல் நாடகம் நடாத்தி, இலங்கையில் வாழும்
பெரும்பான்மை சமூகத்திடம்  முஸ்லிம் சமூகத்தை  பயங்கரவாதிகளாகவும் , பெரும்பான்மை சமூகத்தின் எதிரிகளாகவும், தனித்துவமான பிரிவினை வாதிகளாகவும் காட்டி,  அரசியலில் இவர்கள் பல தலைமுறைகளுக்கு  சம்பாதித்துக் கொண்டார்கள்.

இறுதியில்  சிறுபான்மை சமூகமாக  நாம் வாழும் இந்த நாட்டில் , சிறுபான்மை சமூகத்தின்  உரிமைகளை   பறிக்கும்  முழு அதிகாரத்தையும்  வழங்கி,
முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பல நாடகங்களை அரங்கேற்றினார்கள்.

கடந்த 20 ஆம் திருத்த சட்ட விடயத்தில் திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தை  ஏமாற்றினார்கள்.  இரகசியமான முறையில்  அத்தனை ஏற்பாடுகளையும்  கொடுத்துவிட்டு கட்சியின் தீர்மானத்தை மீரி விட்டார்கள்  எனவும்,  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும்,
கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்  எனவும்,  முஸ்லிம் சமூகத்தை அமைதிப்படுத்தி,இறுதியில் சமூகத்திற்கு துரோகத்தை இழைத்தவர்களுக்கு  உயர்பீடம் மன்னிப்பு வழங்கி விட்டது  என  அறிவித்தார் தனித்துவம் காக்க வந்த தலைவர்.

இம்முறையும்  முஸ்லிம் கட்சிகள்  வரவு செலவு திட்டத்தில்  இதேபோன்ற  ஒரு நாடகத்தை ஆடிக்  கொண்டிருக்கின்றார்கள்.

விரைவில்  இவர்களுக்கான உச்ச பீடத்தின்  மன்னிப்புகள் வெளியாகும் என்பதே உண்மை.

எந்த அரசியல் கட்சியாயினும் அதன் யாப்பின் அடிப்படையில்   கட்சிக்கு துரோகமிழைக்கும் பட்சத்தில், அல்லது கட்சியின் ஏகமானதான முடிவுகளை மீறி நடக்கும் போது, அவற்றையும்  ஆதாரமாக கொண்டு  அக்கட்சியிலிருந்து அவர்களை  நீக்குவதற்கு அக்கட்சியின்  தலைமைக்கு,   உச்ச பீட  நிர்வாகத்திற்கு  முழு  அளவிலான அதிகாரம் உண்டு. 

அதேவேளை முஸ்லிம் கட்சிகள்  எடுத்திருக்கும் முடிவுகளை நோக்கும்போது  நகைச்சுவையாகவே  உள்ளது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, திருப்திகரமான பதில் வரும் வரை மூன்று  உறுப்பினர்களை  பதவிகளில் இருந்து இடைநிறுத்தம்.

இதில் என்ன திருப்திகரமான பதில் உள்ளது.

இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது உறுப்பினர்களை இடைநிறுத்தம்.

வரவு செலவுதிட்ட வாக்கெடுப்புக்கு முதல் நாள், தலைவர் உறுப்பினர்களுடன் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததையும், மலர்மாலை அணிவிக்கப்பட்டதையும் மக்கள் கண்டு களித்தனர். இவர்கள் முஸ்லிம் என்ற வேஷத்தில் யாரைத்தான் தொடர்ந்தும் எமாற்றுகிறார்கள்

இது தற்போது ஆத்திரம் அடைந்துள்ள சமூகத்தை ஆறுதல்படுத்த எடுத்த நடவடிக்கையாகும்.சிறிது காலம் தாமதித்து 20 ஆம்  திருத்தச் சட்டமூலத்திற்கு மன்னிப்பு வழங்கியது போல் உச்சபீடம்  மன்னித்து விட்டது என்ற முடிவுகளை அறிவிப்பார்கள்.

இவர்களின் அரசியலில், இவர்கள்  இப்போதைய  அரசாங்கத்திற்கு  எதிராக,
அல்லது முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்தும்  முடிவுகளைத்  தான் மேற்கொள்ள வேண்டும் என்ற  கடப்பாடு கட்டுப்பாடும் இல்லை. இவர்களுக்கு தேவையான விதத்தில்  தேவையான போது  இவர்களின்  சுயலாபங்களுக்காக, அதற்கு ஏற்றவகையில் முடிவுகளை கொள்ளலாம். அதில் சமூகத்திற்கு  எந்தப்பிரச்சினையும் கிடையாது.

ஆனால் இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் போர்வைக்குள் இருந்துகொண்டு  முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான  இனவாதத்தை கையில் எடுத்து,  முஸ்லிம்களின்  தனித்துவம்  என்ற வேஷத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று நாடகம் ஆடுவதை  அனுமதிக்க  தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

தற்போது அத்தனை அரசியல் ஏமாற்று வித்தைகளையும்  விளங்கிய நிலையில், பெரும்பான்மை மக்கள் சமூகம் இனவாதத்தை எதிர்த்து வருகின்றனர்.  இன்னும் சிறிது காலத்தில்  இனவாதிகளுக்கு பெரும்பான்மை மக்களிடத்தில் இடமில்லை என்பதே உண்மை. இனவாதத்தில் ஏமாந்து போன அவர்களும் அந்தளவு கஷ்டங்களை இன்று அனுபவிக்கின்றனர். எனவே அவர்களும் ஏனைய மக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள் என்பதை அவர்களின் கருத்துக்களின் மூலம் அறியமுடிகின்றது. 

எனவே எமது முஸ்லிம் சமூகம்  இது போன்ற, நம் முஸ்லிம் இனவாதிகளுக்கு  மேலும் சந்தர்ப்பங்களை வழங்காது இவர்களை மொத்த அரசியலில் இருந்து ஒதுக்கி பெரும்பான்மை மக்களுடன் ஒற்றுமையாக வாழும் வழியை கைக்கொள்ள வேண்டும்.

பேரினவாதிகளின் இனவாதத்தை கையில் எடுத்து, இனவாதம் பேசி  இனவாதத்தில் குளிர்காயும் இவர்களின் அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் இத்தோடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.



   வேட்டைக்கு ஆக்கங்களை E-MAIL மூலம்      அனுப்புங்கள்    
                  E-MAIL:vettai007@yahoo.com                 

Post a Comment

0 Comments