உலகில் பல்வேறு வினோதமான விஷயங்கள் நடைபெறுவது உண்டு. அவை இணையத்தில் வீடியோவாக வெளியாகி பல ஆச்சரியங்களை தரும்.
அந்த வகையில், சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்சூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 19 வது மாடி பால்கனியில் இருந்து 82 வயதான பாட்டி தவறி விழுகிறார்.
அப்போது, துணி உலர்த்தும் ரேக்கே, பாட்டி கீழே விழாமல் தடுக்க, பாட்டி ரேக்கில் மாட்டிக் கொண்டு தலைகீழாக தொங்குகிறார்.
இந்த வீடியோ காட்சியானது வைரலாகி நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புக் குழுவினர் 18வது மாடி மற்றும் 17வது மாடியில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.


0 Comments