வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தின் ஆளுமை
தெள்ளுதமிழ்ப் பாவலர் ஆய்வாளர் பல்வேறு
நற்பண்பு நாயகர் ஆட்சிப் பணியாளர்
அற்புத நண்பருக்கு வாழ்த்து.
பணிநிறைவு செய்தாலும் ஒடிசா அரசின்
சிறப்புத் தலைமையா லோசகர் பணியைச்
சிறப்பாய்த் தொடர்கின்ற ஆற்றலாளர் பாலா!
நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.
குறளோ வியம்படைத்த ஏந்தல் கலைஞர்
மகத்துவம் போற்றும் விருதை, குறளின்
அகவழித் தூதராம் பாலா மகிழ
சிறப்புடன் தருகின்றார் வாழ்த்து.
பாலாவின் முன்னணிக்கு இல்லாளின் பங்களிப்பும்
காரணமே! அன்னாரின் ஊக்கம் பொறுமையும்
வேராகும் என்றேதான் வாழ்த்துவோம் கூடிநின்று!
சாதனை நாயகரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்


0 Comments