Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் சியால் கோட்டில் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கிறோம்-ரின் டிவி கண்டனம்

ரின் டிவி யின் முக்கிய அறிவித்தல்
பாகிஸ்தானில் நடந்த அக்கிரமத்தை சர்வதேச ரின் ஊடக வலையமைபும் மவ் பிம சுரக்ஷா  எக்கமுத்துவ அமைப்பும்  கண்டனத்தை தெரியப்படுத்துகிறது

பாகிஸ்தான் சியால் கோட்டில் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கிறோம

சியால்கோட்டில் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு,

 இதுதொடர்பாக நூற்றுக்கும் அதிகமான சந்தேகநபர்களை கைது செய்து அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொண்ட பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகளை நாம் பாராட்டுகின்றோம்.

மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்வதற்கு இஸ்லாம் வழி காட்டவில்லை

 இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் எங்களின் கவலையையும் பிரார்த்தனைகளையும் மரணித்தவரின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலக மக்கள் அனைவரும்; சட்டத்தை மதித்து, சமூகங்க்கு இடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதும் 

எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன்மாதிரிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பது  ரின் டிவி மற்றும்  மவ் பிம சுரக்ஷா எகமுதுவ அமைப்பினதும் எதிர்பார்ப்பாகும்.

அந்த அடிப்படையில் எதிர்வரும் 2021/12/06/திகதி திங்கட் கிழமை பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பாக காலை 11:00 மணிக்கு அனைவரும் ஒன்று திரள்வோம்

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வெளிப் படுத்துவோம்

யாராக இருந்தாலும் அநீதிக்கு ஒன்றுபடுவோம் என்ற செய்தியை நாம் சமூக மயப்படுத்து வோம்

சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி அனைவரும் 2021/12/06 திகதி காலை 11 மணிக்கு பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பாக ஒன்றுபடுவோம்

ஊடக அனுசரணை
 GGI Jabeen Mohamed
சர்வதேச ரின் ஊடக வலையமைப்பு



Post a Comment

0 Comments