Ticker

6/recent/ticker-posts

தேயில தோட்டத்தில தேனருந்த வாடிபுள்ள!


தேயில தோட்டத்தில
தேனருந்த வாடிப்புள்ள.
தூக்கம் கெட்டு நானிருக்கேன்
என்னை பாட்டு பாடி தாலாட்ட..!

ஆத்துக்குள்ள மீன் புடிச்சு
ஆக்கித் தந்தவளே.
அமிர்தமாய் இருந்ததடி.
என் நாவில் எச்சில் ஊறுதடி.

அம்மியில நீ அரைச்ச மொளகாயும்
இனிக்குதடி.
கெட்டியாக நீ சமைச்ச பிலாக்காயும்
ருசிக்குதடி.

பக்குவமாய், கரிசனையாய்
செய்யும் உன் செயல்கள் எல்லாம்
செம்மையாக இருக்குதடி.

கதிரவனைக் காணவில்ல.
 முகத்த நீ காட்டு புள்ள.
கரிசமணி போட்ட புள்ள.
காட்டு வழி போற புள்ள..!

உன் நெனைப்பால நானுமிங்க
வாடி நிற்கையில.
நெனைப்ப வீசிப்புட்டு எங்கேதான்
போனாயோ.

என் ஊட்டு வாசலில
உக்காந்து இருக்கையில
உள்ளம் மட்டும் உன்னையெண்ணி
துடிக்குதடி துவளுதடி..!

வாடி புள்ள வாடி
தேனருந்த வாடி.
தொட்டாசிணுங்கியாட்டம்
உன் கைபட்டு வாட வாடி..!

கொண்டையிலே ரோசாப் பூ வைச்சிக்கிட்டு.
நீ நடக்கும் அழகினிலே 
என் மனசுக்குள்ள ஏதோ ராகம்
கேட்குதடி..!

கால் கொலுசு போட்ட உன்
பாதம் கண்டதுமே
என் ஒடம்பெல்லாம் துள்ளுதடி
பட படவென பதறுதடி..!

வாடி புள்ள வாடி
தேனருந்த வாடி..!







Post a Comment

0 Comments