வீட்டில் ஹோம் ஒர்க் எழுதி கொண்டிருந்தாள் சுகன்யா.
வாசலில் ஒருவர் வந்து நின்றார்
" பாப்பா... அப்பா இருக்காங்களா...?" என்று கேட்டார்.
'மாடியில் நிற்கிறாங்க அங்கிள். உள்ளே வந்து உட்காருங்க. அப்பாவை கூட்டிட்டு வாரேன்." என்று சொன்னவள், வீட்டு மாடியின் படியில் ஏறி சென்றாள்.
செல்போனில் பேசி கொண்டிருந்தான் கிருஷ்ணா.
மகளின் குரல் கேட்டு திரும்பினான்.
" உங்களை பார்க்க ஒரு அங்கிள் வந்திருக்காங்கப்பா..."
செல்போன் அழைப்பை அணைத்து விட்டு, மகளுடன் கீழே இறங்கி வீட்டினுள் வந்தான் கிருஷ்ணா.
" வாங்க... வேலு அண்ணே." என்று அழைத்தான் நிர்மல்.
இருவரும் பத்து நிமிஷங்கள் பேசி கொண்டனர்.
வேலு கிளம்பி சென்றதும், சமையலறையில் இருந்த மனைவியை பார்த்தான் கிருஷ்ணா.
" சாந்தி... நம்ம வேலுவின் மகளுக்கு அடுத்த மாசம் கல்யாணமாம். நாம வாங்கின ஐம்பதாயிரம் ரூபாயை இந்த மாசம் கேட்டாரு. என்ன செய்துவதுன்னு தெரியலை. ஏற்கனவே வீடு கட்ட வாங்கின லோணும் பாக்கி இருக்குது..." என்று கவலையோடு சொன்ன கிருஷ்ணாவின் முகத்தை பக்கத்தில் நின்றிருந்த சுகன்யா பார்த்தாள்
" ஏனப்பா... கவலையாக இருக்கீங்க...?"
"ஒண்ணுமில்லை சுகன்யா. நீபோய் ஹோம் ஒர்க் எழுது..."
சுகன்யா வெளியே வந்தாள்.
" அப்பா... மகாலிங்கம் தாத்தா வந்திருக்காங்கப்பா... சீக்கிரம் வாங்கப்பா..."
என்று ஆசையோடு தாத்தாவை அணைத்து கொண்டாள் சுகன்யா.
" வாங்க மாமா..." என்று அழைத்தான் கிருஷ்ணா.
" மாப்பிளே... பேத்தி சுகன்யா பிறந்த மறுநாளில் இருந்து அவள் பேரிலேயே மாசாமாசம் ஆயிரத்து இருநூறு போஸ்ட் ஆபீஸில் கட்டி வருகிறேன். இந்த மாசத்தோடு பத்து வருஷம் முடியுது. அதற்கான ரசீதை அனுப்பியிருக்காங்க. அடுத்தமாசம் பணம் ஒன்றரை லட்சம் கிடைக்கும். உங்களும் இந்த பணம் உதவியாக இருக்கும்..." என கிருஷ்ணாவின் கையில் அந்த பணத்திற்கான ரசீதை கொடுத்தார் மகாலிங்கம்.
Tags:
சிறுகதை
மிக்க அன்பில்
ReplyDelete