பாகிஸ்தானில் நடந்த கொடூரச் சம்பவம் சம்பந்தமாக பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் .

பாகிஸ்தானில் நடந்த கொடூரச் சம்பவம் சம்பந்தமாக பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் .


பாகிஸ்தானில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சகோதரர் பிரியந்த குமார தியவதன சம்பந்தமான போலிச் செய்திகளை SOCIAL MEDIA க்களில் சிலர் பகிர்ந்து வருகின்றதை அவதானிக்கின்றோம் .

இது மிகப் பெரும் கொடுமை. .இந்த சம்பவத்திற்கு மதச் சாயம் பூசுகின்றார்கள். .இலங்கையில் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க நினைக்கின்றார்கள். ,மத நிந்தனைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற போலியான செய்திகளையும் பரப்புகின்றார்கள்.

இந்த கொலையின் பின்னனியில் இந்தியாவின் உளவுத்துறை இருப்பதாகவும் .இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் நல்லுறவை சீர் குலைக்கும் எண்ணத்துடன் இந்த 
சம்பவம் நடந்திருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன,

இதில் எதுவும் உண்மையில்லை ,பாகிஸ்தான் காவல் துறையும் ,உளவுத்துறையும் இணைந்து இந்த சம்பவத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்கள் .

சம்பவம் ஏற்பட்ட தொழிற்சாலைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு வரவுள்ளமையினால் அங்குள்ள இயந்திரங்களில் ஒட்டப்பட்டிருந்த மதம் சார்ந்த பதாகைகளை அகற்றுமாறு முகாமையாளரான  பிரியந்த குமார தியவதனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சாலையில் பணியாளர்கள், பிரியந்த குமாரதியவடன இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

பின்னர் அவரை தாக்கிய பணியாளர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்று வீதியில் வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர். 

விசாரணைகளுக்காக 160 சிசிரீவி காணொளி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதோடு, தொலைபேசி தரவுகள் ஆராயப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.. 

அவர் நம்பிக்கையான ஒரு சிறந்த மனிதர் என்று மக்கள் தெரிவிக்கின்றார்கள். 

காரணங்கள் இப்படியிருக்கும்போது சிலர்  தேவையற்ற போலிச் செய்திகளை SHARE பண்ணுகின்றார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடலாம் ,எமது நாட்டுப் பிரஜை ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்கள்.என்று குறள் எழுப்பலாம் 

.அதைவிட்டு வதந்திகளை பரப்புவது ஆபத்தில்தான் முடியும் .

கொலை கொலைதான்.அதற்கு மதச்சாயம் பூசி நியாயப்படுத்த  முனைய வேண்டாம்/ .அது எந்த மதமாக இருந்தாலும் அநியாயமாக கொலை செய்வது தடுக்கப்பட்டுள்ளது .
சட்டத்தை அரசாங்கம் மட்டுமல்ல மக்களும் பாதுகாக்க வேண்டும்.

குமார தியவதன என்ற சகோதரர் மத நிந்தனையில் ஈடுபட்டிருந்தால் பொலீசுக்கு அறிவித்திருக்கலாம் .சட்டப்படி தண்டனை கொடுத்திருப்பார்கள்.
அப்படியில்லாமல் பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் தவறை செய்யக் கூடாது.ஒவ்வொரு தவறுக்கும் கொலைதான் முடிவு என்று தீர்மானிக்கும் மனப்பாங்கை நாம் நீக்கி விடவேண்டும்  


பாகிஸ்தானில் மட்டுமல்ல ,இலங்கை இந்தியா மற்றும் அநேகமான உலக நாடுகளிலும் இந்தக் கொடூரம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சட்டத்தை மக்கள் கையில் எடுக்கும் சில காரணங்களும் இருக்கலாம் என்று நினைக்கின்றேன் .

அதாவது இன்று நீதி மன்றங்கள் ஆளும் கட்சிகளின் கைப்பொம்மையாக செயல்படுகின்றன.ஆளும் கட்சிக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் தண்டனை .கொலை செய்தாலும்கூட 

ஆளும் கட்சிக்கு ஆதரவு என்றால் விடுதலை. .இப்படிப்பட்ட சம்பவங்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சர்வ சாதரணமாக நடந்துள்ளது.நடக்கின்றது

இப்படிப் பட்ட சம்பவங்களால் நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை இல்லாமலாகிவிட்டது..
விரக்தியில் இருக்கின்ற மக்கள் சட்டடத்தை கையில் எடுக்கும் துரதிர்ஷ்டம் நிகழ்ந்து விடுகின்றது,அதன் பிரதிபலிப்புத்தான் இன்றைய கொடூர சம்பவங்களுக்கு காரணமாயிருக்கின்றது. . 

அப்படிப்பட்ட எண்ணத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றும் பொறுப்பு நீதித் துறைக்கு இருக்க வேண்டும்.சட்டங்கள் கடுமையானதாயிருக்க வேண்டும்'.அரசியல் சார்பற்ற தீர்ப்பை வழங்கும் தைரியம் நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் .

கொலைக்கு மரண தண்டனைதான் மிகச்சிறந்த உச்ச தண்டனையாக இருக்க வேண்டும்.சரியான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

கொலை செய்யப்பட்டவர் குற்றவாளியாக இருந்தாலும் மக்கள் நாம் அதற்கு நியாயப்படுத்த முனைவது தவறு..நீதி மன்றங்கள் நியாயமான தீர்ப்பு வழங்கி தண்டனைகள் நிறைவேற்ற வேண்டும் .அரசியல் சார்பற்ற தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.அப்பொழுதுதான் நீதி மன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

ஆகவே பாகிஸ்தானில் நடந்த இந்தக் கொடூரத்திற்கு மதச்சாயம் பூசி நியாப்படுத்த வேண்டாம். மீண்டும் மீண்டும் அந்த சம்பவம் தொடர்பான  வீடியோக்களை பகிர்ந்து சகோதரரின் குடும்பத்திகும்,இந்தக் கொடூரத்தால் மனம் நொந்துபோயிருக்கும் அனைத்து மக்களுக்கும்  வேதனையை உண்டாக்க வேண்டாம் என்று மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். 

கொலை காரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு.எமது நாட்டுப் பிரஜைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் .



Post a Comment

Previous Post Next Post