வெண்ணிலா தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பாக கோவையில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

வெண்ணிலா தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பாக கோவையில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா


சிறப்பு நிகழ்வு.
கோவை சுந்தராபுரம்
பண்டிட்  நேரு வித்யாலயா பதின்மப் பள்ளியில் 
மதியம் 02.30 மணிக்கு
தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் விழா சிறப்பாகக் தொடங்கியது...


விழாத் தலைமையுரை:
புலவர்.ஆ.பிரபாகரன்
மன்றத்தலைவர் ஆற்ற,
அறிமுக உரை:
கவியகம் மணிவண்ணன்.
மன்றச் செயலாளர் ஆற்றினார்...
கவிஞர்.கோவைசேகர்
மன்றப் பொருளாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்...

மகாகவி பாரதி திருவுருவப் படத்தை அன்புமிகு இல.ப்யூட்டிலினா      
 உலகின் முதல் மூன்றாம் பாலின பேராசிரியை (தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்கல்லூரி)திறந்து வைத்தார்...


வெண்ணிலா மன்றம் வழங்கும் யோகா பாரதி விருது மற்றும் சான்றிதழை
செல்வி காவ்யா சண்முக சுந்தரத்திற்கு வழங்கி கல்விச் செம்மல் இர..மாரியப்பன் அவர்கள்  (தாளாளர்,பண்டிட் நேரு வித்யாலயா பதின்மப் பள்ளி)பேசினார்...

வெண்ணிலா கலை இலக்கிய மன்ற வலையொளி இணையதளம்துவக்கிவைத்து பட்டாம்பூச்சி பொள்ளாச்சி முருகானந்தம்
 (மாநில சிறப்பு நிருபர்,மக்கள் வெளிச்சம் நாளிதழ் சென்னை.)அவர்கள் உரையாற்றினார்...
ஆண்டுவிழா மலர் வெண்ணிலா கவிதைகள் நூல் வெளியீடு *முன்னோட்டக் கையேடுதனை சொல்லின் செல்வி ,கவிப்பேரரசி முனைவர்
திருமதி.ந.பரமேசுவரி   அவர்கள் ( தமிழ்த் துறைத்தலைவர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி)வெளியிடதமிழ்ச்சுடர்,செந்தமிழ்த் திலகம்
திரு.வேணுகோபால கிருஷ்ணன்  அவர்கள் (ஓம்சக்தி மாத இதழ் உதவி ஆசிரியர்(வி).,ஆலாந்துறை)பெற்றுக் கொள்ள ,தொடர்ந்து
*கவி நட்சத்திரம்  விருது-சான்றிதழ்களை வழங்கி தமிழ்செம்மல்,குறள் யோகி முனைவர்.மு.க.அன்வர் பாட்சா அவர்கள்
 (நிறுவனர்,தலைவர்.திருக்குறள் ஆய்வுக் கழகம்., உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மாநிலத்தலைவர்)சிறப்புரையாற்றினார்...

அதனைத் தொடர்ந்து நிகழ்வின் 2 வது அமர்வாக.,*மதியம் 04-00 மணிக்குபட்டிமன்றம்

 மக்கள்மனதில் நிலைத்திருப்பது பழைய பாடலா? புதிய பாடலா?
எனும் தலைப்பில் நடுவராக கவியகம் மணிவண்ணன் அமர அரங்கத்தைத் தெறிக்கவிடும் ஆளுமைகளாக

புதிய பாடலே!தலைப்பில் 
1.புலவர் ஆ.பிரபாகரன் 
2.''கலைநிலவு' கவிதா வேணுகோபால் 
3.'கவியருவி' தா.இந்துராணி 
4.'கவிச்சுடர்'  மதிவதனிசெல்வராஜ் 
5.'காலக்கணிதமேதை' முனிராஜ் 
6.'உளவியல் கவிஞர்' கோவை ஆறுமுகம் ஆகியோரும்

பழைய பாடலே!எனும் தலைப்பில்
1.கவிஞர். கோவை சேகர் 
2. 'அருந்தமிழ் அமுதசுரபி    ' கி.செ.புவனேசுவரி திலக 
3.'இளங்கவி.'செல்வி. அக்சயா மணிகண்டன் 
4' ராககீதம்'கவி. இரங்கசாமி 
5.'மின்சாரக்கவி'ஜெயப்பிரகாஷ் 
6.:'பைந்தமிழ் வித்தகி' பாண்டிச்செல்வி கருப்புசாமி ஆகியோர் பேசினார்கள்...
நிறைவாகநன்றியுரையை: கவியரசி .பாண்டிச்செல்வி கருப்புசாமி (மன்ற துணைச் செயலாளர்)கூறினார்...

விழா நிறைவுப் பண்:
அன்புச்செல்வி .அக்சரா சங்கீதாபாட,அரங்க நிர்வாகம்: அருந்தமிழ் அமுதசுரபி கி.செ.புவனேசுவரி திலக்  அவர்கள்
(குடும்பநல கலந்தாய்வு ஆலோசகர்)செய்திட,*விழாஒருங்கிணைப்பாளராக,மனிதநேயச் சிந்தனையாளர்
பால தமிழ் செல்வன் செயல்புரிந்தார்...
  

Post a Comment

Previous Post Next Post