உலகில் தீன் வேதமாய்
உண்மைநற் போதமாய்
உலகிதன் முடிவு வரையில்
கலங்கிய மாந்தரும் துலங்கியே
புனிதராய் காசினி வாழ்ந்துசெல்ல
இலங்கிடும் சான்றென நலமிகுக்
கருத்தினை இப்புவி வழங்கிநிற்கும்
பலமிகு மறையிலே
சிலகுறையுள்ளதாய்
பிதற்றிடும் மனிதா சிந்தி
இனமத மொழிகளால்
மனங்களைப் பிரித்திட
இக்குர்ஆன் கூறவில்லை
தினமொரு புதுமையை
குணமிலாக்கொள்கையை
திருமறையுரைக்கவில்லை
மனமுரண்டாகவே பலர்சேர்ந்து புனைந்திட்ட
மதிப்பிலா நூலிதன்றா
சினங்கொண்டு மறையிலே
அசுத்தக்கரங்களால்
சிதைத்திட முனையுகின்றாய்
எத்தனை மார்க்கங்கள்,
இத்தரை தோன்றினும்
எழில்மறை வேதமொன்றே
சத்தியக்கொள்கையை
சித்திநற்பாதையை
சறுகிடா மக்கள் மனதில்
புத்தியாய் வெற்றியாய்
நித்தமிங்குழைக்கும் நல்
புகழ்மறை வார்த்தை
பிழையாய் பித்தனாய்ப்
பிதற்றியே உத்தமராகிட
பகல்கனவு காணுகின்றாய்
அறிஞனாய் ஞானியாய்
நெறியின் சீர் பக்தனாய்
ஆக்கிடும் மறையதன் முன்
பொறிவைத்தழித்திட
குறிவைத்திருக்குமுன்
பாதையை மாற்றித்
தெளிவாய் செறிபுகழ்
வேதத்தின் சிறிதொரு
வரியிலும் சீரற்றுக்காண மாட்டாய்
வெறியிலே வீணற்றுத் தெறிக்குமுன்
வார்த்தையால் வான்மறையழிந்திடாது
ஆயிரத்து நானூறு ஆண்டுமேல் கடந்துமே
அறிவுயர் மாந்தர் பலராய்
ஆய்வுகள் செய்தும் மறைவாழ்வில்
பிழையினை அறிஞர்கள் கண்டதில்லை
நோயுள்ள உள்ளமேன் பாயும்
தீக்குணமுமேன் நீதிமறையறிந்துபாரு
வாய்மைகளுணருவாய்
ஆய்வினைத்தொடருவாய்
வல்லோனின் அருளைக்காண்பாய்
0 Comments