சிறுபான்மை இன அரசியல்வாதிகள் பிரிவினைவாததிற்கு துணை போவதாக ஞானசார தெரிவித்துள்ளார் .

சிறுபான்மை இன அரசியல்வாதிகள் பிரிவினைவாததிற்கு துணை போவதாக ஞானசார தெரிவித்துள்ளார் .

இலங்கை சிறுபான்மை இன அரசியல்வாதிகள் பிரிவினைவாததிற்கு துணை போவதாக ஞானசார தெரிவித்துள்ளார் .

ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் இந்த கருத்தைத் தெரிவித்திருப்பதுதான் நகைப்புக்குரிய விடயம்,

இந்த கருத்தை தெரிவிப்பதற்கு ஞானசார தேரர் எந்த விதத்திலும் தகுதியற்றவர் என்பதுதான் உண்மை ,

அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்த இலங்கை மக்களிடையில் இனவாதத்தை விதைத்தவர் என்ற பெருமை இந்த ஞானசாரருக்கு இருக்கின்றது,.

இந்த நாட்டை துவம்சம் செய்தவர் என்ற பட்டமும் சேர்ந்துள்ளது.

இன்று பொருளாதார சிக்கலில் தவிக்கின்றது  இலங்கை.திரும்புகின்ற பக்கமெல்லாம் இனவாதம் பேசப்படுகின்றது.இனவாதத்தால் சிறுபான்மையினம் சொல்லொண்ணா தும்பங்களை அனுபவிக்கின்றது.

இவை அத்தனைக்கும் இனவாதம் என்ற விஷத்தை விதைத்த ஞானசார தேர் என்ற பயங்கரவாதியே காரணம்.

பிரினைவாததைப் பற்றி  பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது?

நாட்டின் சாதாரண பொதுமக்கள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கோரவில்லை என்றும்  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மிகப்பெரும் இனாவாத கொள்கையைக் கொண்ட ஒருவர்,அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படுகின்ற ஒருவர்  சாதாரண மக்களிடம் சென்று கருத்துக் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?

சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் இன ஐக்கியத்திற்கு மாறாக இனப் பிளவினையே விதைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட விடயங்களை பள்ளி நிர்வாகம்தான் கவனிக்கின்றது.இது இலங்கையில் மட்டுமில்லாமல் உலகில் அத்தனை நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது.

இத்தனை காலமும் பள்ளி நிர்வாகத்தின்கீழ் கவனிக்கப் படுகின்ற முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் நன்றாகத்தான் இருந்தது.

அவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை அந்தந்த ஊர் மக்களே தீர்த்துக்கொள்ளும் நிலையே இருந்து வந்தது.

அரசாங்க சட்டங்களை மதித்து அதன்படியே நடந்துகொண்டாகள்.

ஆனால் இந்த ஞானசார தேரர் இனவாதத்தை என்று கையில் எடுத்தாரோ அன்றிலிருந்து நாட்டின் அழிவு ஆரம்பமாகியதை இலங்கை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் .

ஆனால் ஆட்சியில் அமர்ந்திருக்கும்அரசியல்வாதிகளால்  நாட்டின் அழிவுக்கு யார் காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது.






Post a Comment

Previous Post Next Post