தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு : நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு : நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்


தூக்கமின்மை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஒருவருக்கு 7 மணி நேரம் தூங்கினால் போதுமானதாக இருக்கும். சிலருக்கு 6 மணி நேரம் தூங்கினால், ஒரு சிலருக்கு 9 மணி நேரம் தூங்க வேண்டும்.

உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலத்திற்கு இரவில் நன்றாக உறங்குவது மிகவும் அவசியம். சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்வீர்கள். ஆனால் பலரும் தூக்கமின்மை மற்றும் தூக்கம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் அவதிப்படுகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மூலிகைகள் மற்றும் எளிமையான குறிப்புகளை ஆயுர்வேத நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தூக்கமின்மை கோளாறு இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? தூக்கமின்மை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஒருவருக்கு 7 மணி நேரம் தூங்கினால் போதுமானதாக இருக்கும். சிலருக்கு 6 மணி நேரம் தூங்கினால், ஒரு சிலருக்கு 9 மணி நேரம் தூங்க வேண்டும். எனவே தூங்கி எழுந்த பின் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், எவ்வளவு விரைவாக தூங்குகிறீர்கள், டீப் ஸ்லீப் எனப்படும் எவ்வளவு ஆழமாக, தொந்தரவுகள் இன்றி தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நீங்கள் எவ்வளவு நன்றாகத் தூங்குகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

மன நலக் கோளாறு, மன அழுத்தம், உடல் ரீதியான குறைபாடுகள், ஹார்மோன் கோளாறுகள் ஆகியவை தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். ஓரிரு நாட்கள், அல்லது எப்போதாவது ஒரு நாள், சில காரணங்களுக்காக சரியாக தூங்க முடியவில்லை என்பது பலருக்கும் ஏற்படுவதுதான்.

ஆனால் இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது அல்லது முறையற்ற தூங்கும் நேரம், தூக்கத்தில் இருந்து அடிக்கடி விழிப்பது, உள்ளிட்டவை நீண்ட நாட்களாக இருந்தால், உங்களுக்கு தூக்கமின்மை கோளாறு உள்ளது. மனம். நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆயுர்வேத முறைப்படி அதனை எப்படி சரிசெய்வது என்று நிபுணர்கள்

ஆயுஷ்சக்தியின் இணை நிறுவனர் மற்றும் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் ஸ்மிதா னாராம் பரிந்துரைத்த ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தி தூக்கமின்மை கோளாறு எளிதாக சரி செய்யலாம்.

சங்கு புஷ்பம் அல்லது நீல புஷ்பம் :

பெயருக்கு ஏற்றார் போல நீலநிறத்தில் அழகாக தோற்றமளிக்கும் சங்கு புஷ்பம் பல நூற்றாண்டுகளாக மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நரம்புகளில் உள்ள நச்சுகளை அகற்றி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூளைக்கு ஓய்வு அளிக்கிறது. எனவே, நீங்கள் எளிதாக தூங்கலாம். இது மூலிகை பொடியாகப் பயன்படுத்தலாம். அல்லது பூவாக தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி மூலிகை தேநீராக அருந்தலாம்.

மூளை டானிக் பிராமி :

ஆயுர்வேத மருந்துகளில் பிராமி மிகவும் முக்கியமானது. இது மூளை செல்களை புதுப்பிக்கும் ஒரு அற்புதமான மூலிகையாகும். உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும் பிராமி உதவுகிறது. பிராமியைப் பயன்படுத்தும் முன்பு, உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் முறையான ஆலோசனைப் பெறுவது நல்லது.

மன அமைதிக்கு வச்சா :

பார்ப்பதற்கு கம்பு போல தோற்றமளிக்கும் இந்த மூலிகை மனதை அமைதிப்படுத்துவதற்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. இது டென்ஷனால், படபடப்பால், தீவிரமான மன அழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மைக்கு மிகச்சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகிறது

இந்த மருந்துகள் தவிர்த்து வீட்டிலேயே நீங்கள் உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றினால் தூக்கமின்மை குறைபாட்டை சரிசெய்ய முடியும் என்று மருத்துவர் பரிந்துரைக்கும் வழிமுறைகள் இங்கே.

* தூங்கச் செல்வதற்கு முன் சூடான பால் தினமும் குடித்து வந்தால் தூக்கமின்மைக் கோளாறு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.

* உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி ஊட்டும் புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் ஓரிரு முறை குடிக்கலாம் அல்லது புதினாவை காய வைத்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

* இரண்டு கிளாஸ் நீரில் ஒரு டீஸ்பூன் பிராமி தூள் மற்றும் அஸ்வகந்தா தூள் ஆகியவற்றை கலந்து அதை ஒரு கிளாஸ் வரை சுண்டும் வரை கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்கலாம்.

* வாழைப்பழத்தில் கொஞ்சம் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிறு கோளாறுகள் நீங்கி அதனால் ஏற்படும் தூக்கம் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் நீங்கும்.

* லாவெண்டர் எண்ணெய் மற்றும் ஜாஸ்மீன் எண்ணெயை நெற்றியில் மற்றும் மணிக்கட்டில் தடவினால் விரைவாகத் தூங்க மிடியும்.

நீண்ட நாளாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து தேவையான சிகிச்சைகளைப் பெறுங்கள்.



Post a Comment

Previous Post Next Post