2021ம் ஆண்டில் “National Geographic“ நிறுவனம் உலகிலுள்ள பதின்னான்கு அழகிய அருங்காட்சியங்களில் ஒன்றாக அறிவித்துள்ள “மியூஸியம் ஒப் த பியூச்சர்” என்றழைக்கப்படும் அருங்காட்சியகம் அனைவரதும் கண்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2015ல் தொடங்கப்பட்டுள்ள இதன் நிர்மாணப்பணிகள், 2021ல் திறந்து வைக்கபடவிருந்த நிலையில், நிர்மாணப்பணிகள் பூரணமாக முற்றுப்பெறாததன் காரணமாக திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது.
இதுவரை துபாய் வாழ் மக்கள் இதுவரை கண்டிராத கட்டிட அமைப்பாக்க, பாரியதொரு வட்டவடிவிலான இவ்வருங்காட்சியகத்தின் வெளிப்பகுதி வட்டம் முழுவத்திலு அரபு வாசகங்கள் பொறிக்கப்பட்டு, அதிலிருந்து ஒளித்தோற்றம் வெளிப்படுவதுபோன்றதொரு அமைப்பு காணப்படுகின்றது.
இது இம்மாதம் 22ம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது!
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments