Ticker

6/recent/ticker-posts

Ad Code



சென்னை அணிக்காக இலங்கை வீரரை ஏலத்தில் எடுத்தமைக்கு கடும் எதிர்ப்பு

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவரும் தற்போது சிறிலங்கா கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளருமான மஹீஷ் தீக்‌ஷன என்பவரை ஐ பி எல் தொடரில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுத்தமைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மஹீஷ் தீக்ஷனவை 70 இலட்சம் ரூபாவுக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு எதிரியல்ல. இலங்கை தமிழர்களை வஞ்சித்த, தமிழக மீனவர்களை தினந்தோறும் துன்புறுத்தும் இலங்கையும் இந்தியாவுக்கு எதிரிதான்.

பாகிஸ்தான் வீரர்களை நாடு விரும்பவில்லை என்பது போல் இலங்கை வீரர்களை தமிழர்கள் விரும்பவில்லை என பலரும் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள இளம்வீரர் இலங்கை ராணுவம் அணிக்காக விளையாடியவர். உடனடியாக இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சில ரசிகர்கள் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

Vettai Email-vettai007@yahoo.com 

Post a Comment

0 Comments