நான் உயர் தரத்தில் கல்வி கற்கிறேன். எனினும் என்னால் படித்த விடயங்களை ஞாபகத்தில் வைத்திருப்பது கஷ்டமாகவுள்ளது. மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம். ஆலோசனை கூறுங்கள்.
ஐ.எம். ஷபானா, மடவளை
பதில்: ஞாபக மறதி மூளையுடன் நேரடி யாகச் சம்பந்தப்பட்ட ஒரு நிலையாகும். மூளையில் ஒவ்வொரு தொழிலைச் செய்வதற்கும் பிரத்தியேகமான இடம் உள்ளது. அத்துடன் மூளையின் தொழிற் பாட்டுக்கு குளுக்கோஸ் உட்பட சகல சத்துக்களும் போதியளவு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படல் வேண்டும்.
எனவே இவைகளில் ஏதும் குறை பாடுகள் ஏற்பட்டால் மூளையின் தொழிற்பாடுகளைச் சரிவரச் செய்வதில் பின்னடைவு ஏற்படும். மூளையின் தொழிற்பாட்டுக்கு குளுக்கோஸ் மிகவும் முக்கியம். நீரிழிவு நோயாளர்களுக்குக் கூட குளுக்கோசின் அளவு குருதியில் அதிகரித்து ஏற்படும் தாக்கத்தை விடவும் நீண்ட நேரம் குளுக்கோசின் அளவு குறைவதனால் ஏற்படும் தாக்கமே அதிகம்.
இன்றைய இளம் சந்ததியினரிடையே காணப்படக் கூடிய இயற்கை விதிமு றைகளுக்கு மாறான ஒரு விடயம் தான் உணவில் பழவகைகள், மரக் கறிவகைகள் மற்றும் கீரை வகைகளை உட்கொள் ளாமல் இருப்பது. இவ்வுணவுவகைகளில் தான் மூளையின் தொழிற்பாடு உட்பட உடம்பின் சாதாரண தொழிற்பாட்டுக் கான சகல விட்டமின்களும் காணப்படு கின்றன. இன்று இளைஞர்கள் முக்கிய உணவாக கோதுமை மாவினால் தயாரிக் கப்பட்ட உணவு வகைகளையும் இனிப்பு வகைகளையுமே பாவிக்கின்றார்கள். இவ்வாறான உணவு வகைகள் ஞாபக சக்தி உட்பட உடம்பின் தொழிற்பாட்டு விருத்திக்கும் உடம்பின் தொழிற்பாடு களைச் சமநிலைப்படுத்தி வைப்பதிலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.
அத்துடன் இற்றைக்கு ஏறத்தாள 30 வருடங்களுக்கு முன் மாணவர்கள் படிப் புடன் விளையாட்டுக்களிலும், தனது சிந்தனா சக்தியையும் வினைத்திறனையும் விருத்தி செய்யக் கூடிய நிர்மாண வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் மூளையின் தொழிற்பாட்டினை விருத்தி செய்ததோடு வினைத்திறன் கூடிய வேலைகளைச் செய்யக் கூடியவர் களாகவும் இருந்தார்கள்.
இன்றைய மாணவர்களிடையே விளை யாட்டு என்பது அருகிக் கொண்டே செல்கின்றன. ஆனால் அவர்களை கம்பியூட்டர் விளையாட்டுக்கள் ஆக்கிர மித்துள்ளன. விளையாட்டுக்களின் போது மூளைக்கான குருதிச் சுற்றோட்டமும் அதிகரிப்பதனால் அதிக விட்டமின்களும் கனியுப்புக்களும் மூளையை அடைந்து மூளைக்குப் புத்துயிர்ப்பளிக்கின்றன.
அது மாத்திரமின்றி இன்றைய இளை ஞர்களினதும் விஷேடமாக மாணவர்களி னதும் வாழ்க்கையைச் சீரழிக்கக் கூடிய ஒரு விடயம் தான் தொழில்நுட்ப வளர்ச் சியினூடான கட்டுப்பாடற்ற இணையத் தள (Internet) தொடர்புகள்.
தனது எதிர்கால வாழ்க்கையை ஒளி மயமாக்கிக் கொள்ள புத்தகத்துடன் நடமாட வேண்டிய மாணவர்கள் இன்று வகுப்பறைகளில் கூட கையடக்கத் தொலைபேசியை வைத்துக் கொண்டு Internet ஊடாக உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது தொற்று நோயை விடவும் போகவும் பயனரயா னது. காரணம் தொற்று நோய்க்குச் சிறந்த மருந்து வகைகள் உள்ளன. ஆனால் Facebook, whatsapp போன்ற இணையத் தளத் தொற்று நோய்களினால் ஒருவர் பீடிக்கப்பட்டால் குணமாக்குவது என்பது இலகுவான காரியமல்ல. இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மாணவர்களின் கிர கிக்கும் சக்தியும் ஞாபக சக்தியும் பாதிக் கப்பட்டு கல்வியில் பின்னடைவை எதிர் கொள்வார்கள்.
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர் களேயாகும். தனது பிள்ளைகளுக்கு சகல வசதிகளையுமுடைய கையடக்கத் தொலைபேசியை வாங்கிக் கொடுப் பதன் மூலம் தனது பிள்ளைகளின் எதிர் காலத்திற்கே சாவுமணி அடிக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை. தொலைபேசி என்ற சொல்லை மறு பக்கத்திலிருந்து வாசித்தால் 'பேசித் தொலை' என்ற கருத்தே வருகின்றது. இன்றைய மாணவர் களின் ஒழுக்கச் சீர்கேட்டிற்கும், ஞாபகம் றதிக்கும் இதுவே காரணமாகும்.
எனவே இப்பிரச்சினையை பெற் றோர்கள், ஆசிரியர்கள் கூட்டாகச் சேர்ந் துதான் எதிர்கொள்ள வேண்டும். இங்கு கேள்வி அனுப்பியிருக்கும் சகோதரிக்கு நான் கூறும் பதில் தான் மாணவர்களுக்கு ஏற்படும் மறதியைத் தவிர்க்க வேண்டுடிணைந்தே உரிய திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும். தனது பிள்ளை களை இயற்கை உணவுகளை உட் கொள்ளவும் விளையாட்டில் ஈடுபடவும் ஊக்கப்படுத்துவதோடு தேவையேற்படின் குறைந்த வசதிகளைக் கொண்ட கைய டக்கத் தொலைபேசிகளையே கொடுக்க வேண்டும். அத்துடன் இது விடயமாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கியம்.
மேலும் இரசாயனப் பொருட்கள் சேர்க் கப்பட்ட உணவு வகைகள் உடம்பில் ஏற்படுத்தும் பாதிப்புக்களைப் பற்றியும் தெளிவூட்டுதல் முக்கியம்.
இது தவிர ஒரு சில நோய் நிலைக ளிலும் ஞாபக மறதி ஏற்படலாம். எனவே தீவிர ஞாபக மறதியுடைய மாணவர்கள் வைத்தியர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.
யூனானி வைத்தியத்துறையில் ஞாபக சக்தியையும், கிரகிக்கும் ஆற் றலை அதிகரிக்கக்கூடிய பல சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன.
இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக பெற்றோர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்பதற்கு ஒப்ப ஆரம்பத்திலிருந்தே உங்கள் பிள்ளைகளுக்கு இயற்கை உணவுகளைக் கொடுத்து நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்து கையடக்கத் தொலைபேசியை பல முறை சிந்தித்து தேவையேற்படின் மாத்திரம் வாங்கிக் கொடுத்தால் பிள்ளைகளின் கல்விக்கு இடையூறாக இருக்கும் ஞாபக மறதியை வெற்றி கொள்ளலாம்.
DR,NASEEM
0 Comments