எனக்கு நீரழிவு நோய் இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன் இரத்தப் பரிசோதனை மூலம் அறியப்பட்டது. மருந்துகள் பாவிப் பதற்கு முன் Life Style Modification மூலம் இந்நோயைக் கட்டுப் படுத்துவதற்கு முயற்சிக்கும் படி வைத்தியர் ஒருவர் கூறினார். இது விடயமாக பூரண விளக்கத்தைத் தரவும்.
றியாஸ் ஓட்டமாவடி
பதில் எமக்கு அதிகமாகக் கிடைக்ககூடிய கேள்விகளில் நீரிழிவு நோயும் ஒன்றாகும். இங்கு கேள்வி அனுப்பி யிருப்பவரும் தனக்கு நீரழிவு நோய் இருப்பதாகக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறியப்பட்டுள்ளதாகவும், மாத்திரைகள் பாவிப்பதற்கு முன் பரிவு Style modification வாழ்க்கை நடை முறைகளை மாற்றியமைத்தல் வழி முறைகளைக் கடைப்பிடித்து சீனியின் அளவைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் படி ஒரு டொக்டர் கூறியதாகவும் இது பற்றிய பூரண விளக்கத்தைத் தரும்படி போலவும் கேட்டுள்ளார்.
Life Style modification ஒரு புதிய வசனமாக இருந்தாலும் கூட எமது முன்னோர்கள் தங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்துவந்த விடயங்களை உள்ளடக்கியுள்ளன. எனவே நாமும் இந்த விடயங்களை பின்பற் றினால் அதுவே நோய் தீர்க்கும் மருந்தாக அமையும்.
எமது முன்னோர்களின் அன்றாட வாழ்க்கை இயற்கை உணவையும் நடைப்பயணத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தன. இந்த இரண்டு விடயங்களையும் தான் Life style modification என்ற தலைப்பின் - கீழ் நவீன வைத்தியத்துறையில் விபரிக்கப்பட்டுள்ளன.
எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இரு விடயங்களையும் தனது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால் நீரழிவு நோயிலிருந்து மாத்திரைகளை பாவிக்காமலேயே சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம். உணவை எடுத்துக் கொண்டால் இயற்கை உணவுகளை உட் கொள்வதைப் போன்றே சமிபாட்டுத் தொகுதிக்கு ஓய்வு கொடுப்பதும் முக்கியம். எமது உடம்பில் சமிபாட்டுத் தொகுதியைத் தவிர ஏனைய சகல உறுப்புக்களும் தினமும் தூக்கத்தின் போது ஓய்வெடுக்கின்றன. ஆனால் இராப்போசனத்தை சமிபாடடையச் செய்வதற்காக வேண்டி தூக்கத்திலும் சமிபாட்டுத் தொகுதி தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற உண்மை எம் அனேகருக்குத் தெரியாது. இதன் காரணமாகத் தான் நோன்பின் மூலம் வருடத்திற்கு 30 நாட்களாவது சமி பாட்டுத் தொகுதிக்கு ஓய்வு கொடுப்பதற்கான ஏற்பாட்டை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான். அத்துடன் 20ஆம் நூற்றாண்டளவில் கூட நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களுக்கு பட்டினிச் சிகிச்சை என்ற ஒரு முறை வழக்கத்தில் இருந்தது.
எனவே நீரிழிவு நோயாளிகளின் உடற்தொழிற்பாட்டுக்கும் தேவைக்கும் ஏற்ப உணவை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக இனிப்புக் கூடிய சீனி, தேன், கருப்பட்டி, சகல விதமான இனிப்புப் பண்டங்கள் போன்ற வைகள் உட்கொள்வதை முற்றாகத் தவிர்த்து, தானிய வகைகள், விதைகள், பழவகைகள் போன்றவற்றின் மூலம் உடம்பின் தொழிற்பாட்டுக்குத் தேவை யான காபோஹைதரேட்டுக்களை இனிப்புத் தன்மையற்ற உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
விஷேடமாக சோயா, அவரை விதைகள், பயறு, உழுந்து போன்றவைகள் சிறந்தவை. எண்ணை வகை களில் எள்ளு எண்ணெய், கடுகு எண்ணை, சோயா எண்ணை ஒலிப் எண்ணை போன்றவைகளில் ஏதாவது ஒன்றைப் பாவிக்கலாம். அத்துடன் உடம்புக்குத் தேவையான புரதங்களை மிருக மாமிசங்கள் மூலம் பெறாமல் மீன், பால், மரக்கறிவகைகள் மூலம் பெற்றுக்கொள்வது மேல். மேலும் கீரைவகைகள், வெந்தயம், பார்லி, ஓட் போன்ற நார்த் தண்மை யுள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் நீரழிவு நோயாளிகள் சிறந்த பயனைப் பெறலாம். அதிக உப்புத்தன் மையுடைய உணவு வகைகளை முற் றாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
பழவகைளை பொறுத்தவரையில் பப் பாசி, கொய்யாப்பழம், அப்பில், தோடம் பழம், பூசனிக்காய் போன்றவைகளைச் சாதாரண அளவில், பாவிப்பதோடு, அதிக இனிப்புத் தன்மையுடைய பழவ கைகள், பதனிடப்பட்ட பழவகைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
உடல் நிறை அதிகமானவர்கள் தனது உடம்பைக் கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியமாகும். அதற்கான சிகிச்சை தேவைப்படின் யுனானி மருத் துவத்தில் சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. மேலும் புகைத்தல், மதுபானம் போன்றவைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
உணவைப் போன்றே உடற்பயிற்சியும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத் துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. உடற்பயிற்சியின் காரணமாக உடம் பினால் சுரக்கப்படும் இன்சுலினின் தொழிற்பாடு கூடுவதன் காரணமாக நீரி ழிவிற்கான மாத்திரைகளின் அளவைக் குறைக்கலாம் அத்துடன் அதிக குருதி அழுத்தம், அதிக கொலஸ்ரோல் போன்ற நோய்நிலைகளையும் கட் டுப்படுத்துவதோடு இருதயம், நுரையீரல் போன்றவற்றின் சீரான தொழிற் பாட்டுக்கும் உதவுகின்றன.
நீங்கள் உடற்பயிற்சியை ஆரம்பிக்க முன் வைத்தியரினது ஆலோசனையைப் பெறுவதும் ஒரு முக்கியமான விடய மாகும். அத்துடன் மனநலம் என்பதும் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற் கூறிய ஆலோசனைகளைப் பின் பற்றியும் நீரிழிவு நோய் சாதாரண நிலைக்குத் திரும்பாவிட்டால் நவீன மருத்துவ வில்லைகளைப் பாவித்து அதன் பக்க விளைவுகள் காரணமாக மேலும் தொல்லைகளைத் தேடிக்கொள்ளாமல் இயற்கை மருத்துவச் சிகிச்சை முறைக்கான யுனானி, ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள் மூலம் சுகம் பெற முயற்சிக்க வேண்டும்.
இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக அண்மைக்காலத்திலிருந்து நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது கட்டுப்பாடான இயற்கை உணவுகளின் மூலமும் தொடர்ச்சியான உடற்பயிற்சியின் மூலமும் நீரழிவு நோயை வெற்றி கொள்வோம் என வேண்டுகிறேன்.
0 Comments