Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது-பல நாடுகள் விமான சேவையினை ரத்து செய்துள்ளன

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவரை 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பலர் வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என்பதால் ஒமைக்ரான் வைரஸ் பரவல் மேலும் அதிகரித்து விடும் என்று பல நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. எனவே பல நாடுகள் கடந்த சில நாட்களாக விமான சேவையினை ரத்து செய்துள்ளன. நேற்று மட்டும் உலகம் முழுவதும் 2,800 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலும் அமெரிக்காவுக்கு போக வேண்டிய விமானங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று 1100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை வரை ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments