உலகத்துக்கு கொரோனா பெருந்தொற்றை வஞ்சகமின்றி வாரி வழங்கி, உலக நாடுகளையெல்லாம் சொல்லெணா துயரத்தில் ஆழ்த்திய நாடு சீனா. சீனா நாட்டில் எதிர் வரும் ஜனவரி மாதம் இருதியில் குளிர்காலம் தொடங்கும் நிலையில்
நாட்டில் மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொஞ்சம் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறது. இது ஜின்பிங் அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த சீன அரசு தற்போது பல்வேறுபட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஸேஜியங் மகாணத்தில் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சீனா தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள், தேவையற்ற பயணங்களை தடை செய்தல், போன்ற இருக்கமான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளதாக சீனாவில் வசிக்கும் சீனர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சீனாவில் தற்போது பரவ ஆரம்பித்துள்ள கொரோனா தோற்று முன்னர் பரவிய கொரோனாவா, அல்லது உருமாறிய ஒமைக்ரரோனா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சீனாவின் ஸேஜியாங் மாகாணத்தில் பல நகரங்களில் கடுமையான கணிசமான கட்டுப்பாடுகளை சீனா கையாண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
சீனா தற்போது பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்திப வருகின்றது . இந்த நிலையில், 1 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கிற சீனாவின் வட பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தின் தலைநகரமான ஷியான் நகரத்தில். உள்ளூர் அளவில் நேற்று முந்தினம் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 211 அதிகரித்துள்ளது.
இந்த நகரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் அமலுக்கு வந்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் சீனாவின் சில பகுதிகள் முடக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும். எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் முடக்கம் உட்பட இருக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம் என ஊர்ஜிதம் அற்ற செய்திகள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
கட்டுரை