Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஓடக்கர மண்ணெடுத்து!


ஓடக்கர மண்ணெடுத்து 
ஓம்மொகத்த வரைஞ்சேனே
ஓடத்தில ஒன்னோட 
போகத்தான் துடிச்சேனே
ஓரமாக நின்னு 
வேடிக்க பார்ப்பவளே
ஒண்டியாக என்னத் 
தவிக்க வெச்சவளே
ஓடாதே பொன்மயில 
ஒயிலாகப் போறவளே
ஒட்டி ஒறவாடிடவே 
ஒம்மாமன் வந்தேனே
ஒலக அழகி 
ஓம்பாதம் தொட்டிடவா
ஒன்னோடு ஒன்னாக 
ஓடோடி வந்திடவா
ஒத்தக்கத இதழாலே 
சொட்டவே மாட்டாயோ?
ஒரசிப் பார்க்கவே 
பூமுகம் காட்டாயோ?





Post a Comment

0 Comments