குண்டுகள் மற்றும் தோட்டாக்களை விட அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் பசியால் இறக்க வாய்ப்பு அதிகம்- ICG அமைப்பு எச்சரிக்கை

குண்டுகள் மற்றும் தோட்டாக்களை விட அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் பசியால் இறக்க வாய்ப்பு அதிகம்- ICG அமைப்பு எச்சரிக்கை

"கடந்த இரண்டு தசாப்தங்களில் குண்டுகள் மற்றும் தோட்டாக்களை விட அதிகமான ஆப்கானிஸ்தான் மக்களை பசியால் இறக்க வாய்ப்பு அதிகம்" என்று அமெரிக்க சிந்தனைக் (ICG) குழு எச்சரித்துள்ளது.

திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, "அரசு தோல்வி மற்றும் வெகுஜன பட்டினியை" தவிர்க்க ஆப்கானிஸ்தான் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக்  (ICG)குழு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை  அடுத்து பசி மற்றும் வறுமை "கடந்த இரு தசாப்தங்களில் அனைத்து குண்டுகள் மற்றும் தோட்டாக்களை விட அதிகமான மக்களைக் கொல்லக்கூடும்" என்று அது எச்சரித்துள்ளது

 ஆப்கானிஸ்தான் வெடித்து சிதறாமல் இருக்க  அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நன்கொடை நாடுகள் உதவாவிட்டால், இந்த குளிர்காலத்தில் ஒரு மில்லியன் ஆப்கானிய குழந்தைகள் பட்டினியால் இறக்கக்கூடும் என்று ICG அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post